உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளி மாணவர்கள் மோதல்; மூன்று பேருக்கு கத்திக்குத்து 

பள்ளி மாணவர்கள் மோதல்; மூன்று பேருக்கு கத்திக்குத்து 

ஜே.பி., நகர் : இரு பள்ளிகளின் மாணவர்கள் இடையில் ஏற்பட்ட மோதலில், மூன்று பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு ராகிகுட்டா பகுதியில் உள்ள, தனியார் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு மற்ற பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் வந்து, தேர்வு எழுதுகின்றனர்.இந்நிலையில் ராகிகுட்டா தனியார் பள்ளி மாணவர்களுக்கும், இன்னொரு தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இடையில், நேற்று முன்தினம் திடீரென தகராறு ஏற்பட்டது. கும்பலாக கூடி ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.அப்போது ராகிகுட்டா தனியார் பள்ளி மாணவர்கள், மூன்று பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட, ஐந்து மாணவர்களை ஜே.பி., நகர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ