உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்க்ரிப்டை மாற்றுபவர் யோகேஸ்வர் முன்னாள் எம்.பி., சுரேஷ் கண்டுபிடிப்பு

ஸ்க்ரிப்டை மாற்றுபவர் யோகேஸ்வர் முன்னாள் எம்.பி., சுரேஷ் கண்டுபிடிப்பு

ராம்நகர், : ''சென்னபட்டணா தொகுதியில், நான் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கவில்லை. இதுகுறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்,'' என, காங்கிரசின் முன்னாள் எம்.பி., டி.கே.சுரேஷ் தெரிவித்தார்.ராம்நகர் மாகடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, நான் ஆலோசிக்கவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் மேலிடம், முதல்வர், துணை முதல்வர் முடிவு செய்வர். தகுதியான வேட்பாளரை எங்கள் கட்சி களமிறக்கும். நானும் கூட சாதாரண தொண்டனாக பணியாற்றுகிறேன்.தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த குமாரசாமி ராஜினாமா செய்து, ஒரு வாரம் ஆகிறது. தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கவில்லை. தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகளில், துணை முதல்வர் சிவகுமார் ஆர்வம் காண்பிக்கிறார்.எனக்காக கனகபுரா தொகுதியை, அவர் விட்டுத்தருவதாக கூறுவது வெறும் யூகம். நான் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. எனக்கு மக்கள் ஓய்வு கொடுத்துள்ளனர். நானும் அழுத்தத்தில் இருந்தேன். தற்போது அதில் இருந்து விடுபட்டுள்ளேன்.சென்னபட்டணா தொகுதியில், சிவகுமாரின் அரசியல் அத்தியாயம் முடியும் என, பா.ஜ.,வின் யோகேஸ்வர் கூறியுள்ளார். இவரது பேச்சுக்கு முக்கியத்துவம் தர தேவையில்லை. அவர் திரைப்பட நடிகர், இயக்குனர். எப்போது வேண்டுமானாலும், ஸ்க்ரிப்டை மாற்றுவார்.சென்னபட்டணா தொகுதியில், சிவகுமார் போட்டியிடுவது அவரது தனிப்பட்ட விஷயம். இது பற்றி எனக்கு தெரியாது. கட்சியும், தொகுதி மக்களும் முடிவு செய்தால், அவர் போட்டியிடலாம். இதுகுறித்து அவரிடமே கேளுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை