மேலும் செய்திகள்
பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: 6 பேர் பலி
2 hour(s) ago
ஜோஹோ மெயிலுக்கு மாறினார் அமித் ஷா
2 hour(s) ago
முதல்வர் வேட்பாளர் நிதிஷ்!
2 hour(s) ago
தாவணகெரே: “சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்,” என, முதல்வர் சித்தராமையாவுக்கு, காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா ஆதரவு தெரிவித்துள்ளார்.துணை முதல்வர் சிவகுமாரை, முதல்வராக நியமிக்க வேண்டும் என, சில தினங்களுக்கு முன்பு, தாவணகெரே சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா கருத்துத் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த கெம்பே கவுடா ஜெயந்தி விழாவின்போது, முதல்வர் பதவியை சிவகுமாருக்கு, சித்தராமையா விட்டுக் கொடுக்க வேண்டும் என, ஒக்கலிகர் சமூக மடாதிபதி சந்திரசேகர சுவாமிகள் வேண்டுகோள் வைத்தார். மடாதிபதியின் பேச்சுக்கு, முதல்வர் சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா அளித்த பேட்டி:முதல்வர் சித்தராமையா சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரது நிர்வாகத்தில் எந்த குறைபாடும் இல்லை. அவரை மாற்ற வேண்டும் என்று யார் கேட்டது? ஒருவேளை அவரை மாற்ற வேண்டும் என்றால் கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். ஐந்து வாக்குறுதித் திட்டங்களை நிறைவேற்றியதன் மூலம், சித்தராமையா பிரபலம் அடைந்துள்ளார். ஜாதி அடிப்படையில் ஐந்து பேருக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது சாத்தியம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.சாமனுார் சிவசங்கரப்பா, அகில இந்திய வீரசைவ லிங்காயத் மகாசபை தலைவராக உள்ளார்.காங்கிரஸ் ஆட்சியில் லிங்காயத் அதிகாரிகள் பெரிய பதவிகளில் அமர்த்தப்படவில்லை. எங்கள் சமூக அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர் என, முன்பு இவர் குற்றஞ்சாட்டி இருந்தார்.சித்தராமையாவுக்கு எதிராகவும் சில வார்த்தைகளை அப்போது அவர் பயன்படுத்தி இருந்தார். தற்போது முதல்வருக்கு ஆதரவாக அவர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago