உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்துவுக்கு காங்., மேலிடம் முழு ஆதரவு; ராசியில்லாத ராஜாவான சிவகுமார்

சித்துவுக்கு காங்., மேலிடம் முழு ஆதரவு; ராசியில்லாத ராஜாவான சிவகுமார்

கர்நாடகாவில், கடந்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் முடிந்த பின், ஒரு வழியாக ராகுலின் ஆதரவுடன் சித்தராமையா முதல்வர் நாற்காலியை கைப்பற்றினார். சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது.முதல்வர் பதவிக்காக சித்தராமையாவுக்கு அவ்வப்போது எதிர்ப்பு உருவானது. இரு தலைவர்களும், தங்கள் ஆதரவாளர்களை உசுப்பேத்தி விட்டனர். அவ்வப்போது காங்கிரசின் அரசியல் பரபரப்பாக காணப்பட்டது.

தலைவலி

லோக்சபா தேர்தலை வைத்து மாநில காங்கிரஸ் தலைவரான சிவகுமார் போட்ட கணக்கு தப்பானது. இது, முதல்வர் சித்தராமையாவுக்கு வசதியாக போய் விட்டது. ஆனால், வால்மீகி மேம்பாட்டு ஆணைய ஊழல், 'மூடா' முறைகேடு, அவருக்கு பெரிய தலைவலியாக மாறி விட்டது.அவர் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகளான பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் பெங்களூரில் இருந்து மைசூரு வரை பாதயாத்திரை துவங்கி உள்ளன. மூடா முறைகேடு தொடர்பாக சித்தராமையாவுக்கு எதிரான ஆவணங்களை சிவகுமார் தான் பா.ஜ.,விடம் கொடுத்தார் என்று மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி, 'குண்டு' போட்டார்.இந்த குற்றச்சாட்டை சிவகுமார் மறுக்கிறார். இது ஒருபுறம் இருக்க, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழல், மூடா முறைகேடு தொடர்பாக சித்தராமையாவை கட்சி மேலிடம் கண்டிக்கும். தேவைப்பட்டால் அவரை முதல்வர் பதவியில் இருந்து மேலிடம் விலக சொல்லும் என்று சிவகுமார் நினைத்திருந்தார்.

தயாராக இல்லை

ஆனால், சித்தராமையாவுக்கு, கட்சி மேலிடத்தில் ஆதரவு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் டில்லி சென்ற அவர் மேலிட தலைவர்களை சந்தித்து, 'என் மீது எந்த தவறும் இல்லை. ஆனாலும், என்னை சிக்க வைக்க முயற்சி நடக்கிறது' என்று கதறாத குறையாக கூறி உள்ளார்.அப்போது மேலிட தலைவர்களோ, 'எதற்கும் கவலைப்பட வேண்டாம். சட்டப்படி போராடுவோம்' என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கர்நாடகா வந்த, காங்கிரஸ் தேசிய பொது செயலர் வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர், சரியாக வேலை செய்யாத அமைச்சர்களை எச்சரித்ததுடன், மூடா முறைகேட்டில் முதல்வர் மீது எந்த தவறும் இல்லை. அவருக்கு நீங்கள் தோளோடு தோள் நிற்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.இதன் மூலம் சித்தராமையாவை, முதல்வர் பதவியில் இருந்து இறக்க மேலிடம் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ள சிவகுமார் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.--- நமது நிருபர் - -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தத்வமசி
ஆக 07, 2024 13:26

இந்த கூட்டம் தான் "நாற்பது சதவிகிதம் கமிஷன் கேட்கிறார்கள்" என்று தங்களின் அடிவருடிகள் மூலம் மாநில தேர்தலுக்கு முன்பாக பிஜேபியை எதிர்த்து பேச வைத்தது. அதை நம்பி இவர்களுக்கு ஓட்டு போட்டனர் மக்கள். அது உண்மையா பொய்யா என்று தெரியாது. இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதே கூட்டம் அதே மாதிரி நாற்பது சதவிகித கமிஷன் என்று குற்றம் சாட்டியது ஊடகங்களால் அப்படியே மூடி மறைக்கப் பட்டது. காங்கிரசையும் ஊழலையும் பிரித்தே பார்க்க இயலாது. இதில் புத்திசாலி மக்களா ? இல்லை காங்கிரசா ? மக்கள் மனம் திருந்த வேண்டும்.


அப்பாவி
ஆக 07, 2024 09:40

என்ன ராசியில்லை? 1500 கோடி ரேஞ்சுக்கு சொத்து சித்துகிட்டே இருக்கா? இப்பிடியே சேஃபா இருந்துட்டுப் போங்க.


Anbuselvan
ஆக 07, 2024 08:58

இப்போ காங்கிரஸ் இந்த நிலைப்பாட்டை எடுக்காவிடில் அது காங்கிரஸ்க்கு பெறுத்த பின்னடைவாகி விடும் என்பதை திரு சிவகுமாருக்கே நன்கு தெரியும். இந்த மீடியாக்கள்தான் குய்யோ முய்யோ என ஏதோ பரபரப்பை உருவாக்கி தங்களது TRS ரேட்டிங்காக இப்படி எல்லாம் எழுதி வருகின்றன. கோர்ட் முதலமைச்சருக்கு எதிராக தீர்ப்பு கொடுத்தால் ஒழிய ஒன்றும் மாறாது.


Balasubramanian
ஆக 07, 2024 08:58

செலவழிக்க மட்டுமே நாங்களா? நாங்க இல்லாவிட்டால் தெலுங்கானா காங்கிரஸ் வசமாயிருக்குமா? கேளுங்க பாஸ்


Nandakumar Naidu.
ஆக 07, 2024 08:21

காங்கிரஸ் மேலிடத்திற்கு மக்களின் பணத்தை கொள்ளையடித்து பெட்டி பெட்டியாக மேலிடத்திற்கு கொடுப்பவர்கள் தானே வேண்டும். அதான் சித்து வேண்டும்.


Duruvesan
ஆக 07, 2024 08:44

என்னமோ dks யோக்கியன் மாதிரி, நாயுடு மொத்த பயலும் லைப் டைம் பெயில் ல இருக்காரானுங்க


bgm
ஆக 07, 2024 07:40

காங் மாடல்


Duruvesan
ஆக 07, 2024 07:09

ஆக இன்னும் ஒரு கூட்டணி ஆட்சி விரைவில். சிவகுமார் கேஸ் எல்லாம் கிளோஸ் ஆகும்,


மேலும் செய்திகள்









புதிய வீடியோ