| ADDED : ஆக 20, 2024 01:12 AM
நாக்பூர், மஹாராஷ்டிராவில், கால் பாதங்களுக்கு மசாஜ் செய்ய மறுத்த தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள நவப்பரா பகுதியில் தத்தாத்ரேயா ஷிண்டே, 62, தன் இரு மகன்களுடன் வசித்து வந்தார். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைய மகன் குஷால், 33, அவ்வப்போது வீட்டில் தகராறு செய்து வந்தார்.நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவர், தந்தை தத்தாத்ரேயாவை அழைத்து, தன் கால் பாதங்களுக்கு மசாஜ் செய்ய சொல்லி வற்புறுத்தினார்.அதற்கு மறுக்கவே, தத்தாத்ரேயாவை மார்பு, வயிறு, தலை உள்ளிட்ட பகுதிகளில் குஷால் பலமாக தாக்கினார்.தடுக்க வந்த சகோதரர் பிரணவையும் அவர் மிரட்டி தாக்கினார். சரமாரி தாக்குதலில் நிலைகுலைந்த தத்தாத்ரேயா மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, தத்தாத்ரேயா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.பிரணவ் அளித்த புகாரைத் தொடர்ந்து, குஷாலை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.