உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிஸ் பண்ணிடாதீங்க: மத்திய அரசில் ஸ்டெனோகிராபராக 2006 பேருக்கு வாய்ப்பு; இன்னும் 4 நாள் தான் பாக்கி!

மிஸ் பண்ணிடாதீங்க: மத்திய அரசில் ஸ்டெனோகிராபராக 2006 பேருக்கு வாய்ப்பு; இன்னும் 4 நாள் தான் பாக்கி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 2006 கிரேடு சி மற்றும் டி பிரிவுகளைச் சார்ந்த ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 17. இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது.

கல்வி தகுதி என்ன?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு படித்தவர்களும் தகுதியானவர்கள்.கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆன்லைன் தேர்வில் வெற்றி பெறுவோர், ஸ்டெனோகிராபி திறன் தேர்வில் பங்கேற்க வேண்டும். இதில் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.

வயது வரம்பு

சுருக்கெழுத்தர் 'டி' கிரேடு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 'சி' கிரேடு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு சலுகை

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு எப்போது?

வரும் அக்டோபர் அல்லது நவம்பர் தேர்வு நடைபெற உள்ளது. ஸ்டெனோகிராபர் தேர்வில் பெறும் மதிப்பெண், சுருக்கெழுத்து எழுதும் திறன் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கட்டணம்

விண்ணப்ப கட்டணம் ரூ.100. எஸ்.சி., எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. https://www.ssc-cr.org/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு மையங்கள்

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு

இந்தப் பணிக்கு பார்வையற்றோர், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், காது கேளாதோர், கை, கால்களை இழந்தவர்கள், முதுகு தண்டுவடம் பாதித்தவர்கள், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பிரச்சனை உள்ளவர்கள், ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர்கள், கற்றல் குறைபாடு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Jai
ஆக 13, 2024 17:19

மத்தியரசில் பல வேலை வாய்ப்புகள் இருந்தாலும் தமிழ் மக்கள் முயற்சி செய்வதில்லை. 2006 வேலையில் நம் மக்கள் 6 வேலைகள் கூட வாங்கப்போவதில்லை. திரடி மாடலில் இந்தியா வேறு நாடு என்று மக்களை நினைக்க வைப்பதுதான் காரணம். இந்தியா அரசின் அதிக வருமானம் தமிழ்நாட்டில் இருந்துதான் வருகிறது. தமிழ்நாட்டு மக்களை மத்திய அரசில் வேலை தேட ஊக்குவிக்க வேண்டும். வெளியுர் சென்றால் மாடலில் இருந்து தப்பித்து விடுவார்கள் என்ற ஐடியாலஜி அடக்குமுறை தான் காரணம்.


Rajarajan
ஆக 13, 2024 16:24

இவையெல்லாம் தனியாரில் வழக்கொழிந்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. இப்போது புரிகிறதா ? பல அரசு / பொது துறைகள் ஏன் வீணானவை என்றும், இவற்றால் பொதுமக்களின் வரிப்பணம் எவ்வளவு வீண் என்றும். இழுத்து மூடுங்கப்பா.


Sridhar
ஆக 13, 2024 14:35

இந்த காலத்துல இன்னுமா இந்த சுருக்கெழுத்து ஸ்டெனோ எல்லாம்? யாருங்க அப்படி டிக்டேஷன் கொடுத்துட்டுருக்காங்க?


Muralidharan raghavan
ஆக 13, 2024 16:33

சரியான கேள்வி. இன்று எத்தனை பேருக்கு டிக்டாஷன் கொடுக்க தெரியும். நானும் ஒரு ஸ்டெனோதான் . இன்றையநிலையில் முதிர்ந்த வழக்கறிஞர்கள் மட்டுமே ஸ்டெனோகிராபர் உபயோகப்படுத்துகிறார்கள்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி