உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராப்ரி தேவி ஆகிறார் சுனிதா கெஜ்ரிவால் மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

ராப்ரி தேவி ஆகிறார் சுனிதா கெஜ்ரிவால் மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

புதுடில்லி:பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியைப் போல, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவும், கணவரின் பதவியை வகிக்கத் தயாராகி வருகிறார், என, மத்திய அ அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.டில்லி பா.ஜ., தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சருமான ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:பீகாரில் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றவுடன், அவரது மனைவி ராப்ரி தேவி முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார்.டில்லியிலும் அதேபோல நடத்த ஆம் ஆத்மி கட்சி திட்டமிடுகிறது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், விசாரணை முடிந்தவுடன் சிறையில் அடைக்கப்படுவார்.இதையடுத்து, டில்லி முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ள அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் தயாராகி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார். கெஜ்ரிவாலிடம் ஏப். 1ம் தேதி வரை விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து, ஏப். 2ல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் கெஜ்ரிவால் சிறைக்கு அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது ஏப். 3ல் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ