உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி: அயோத்தி ராமர் கோயிலில் ராமநவமி அற்புதம்

ராமர் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி: அயோத்தி ராமர் கோயிலில் ராமநவமி அற்புதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: ஸ்ரீ ராம நவமி தினமான இன்று (ஏப்ரல் 17) அயோத்தி ராமர் கோயிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள் திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலையின் நெற்றியில் பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது.உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த ஜனவரி 22ம் தேதி நடந்தது. இதன் பின், விழா நிறைவடைந்த மறுநாள் முதல், தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.இந்நிலையில், ராமநவமி திருநாளான இன்று (ஏப்ரல் 17) அயோத்தி ராமர் கோயிலில் சரியாக மதியம் 12.16 மணிக்கு கருவறையில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிபடும் அரிய நிகழ்வு நடந்துள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது. இந்த நிகழ்வு 5 நிமிடம் நீடித்துள்ளது. இந்த அரியநிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் ராமர் கோயிலில் கூடினர். அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டு ராமர் மீதான தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். சூரிய ஒளி ராமரின் நெற்றியில் நேரடியாக விழும் அளவிற்கு நேர்த்தியாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. சூரிய ஒளி ராமரின் நெற்றியில் விழும் படியாக வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி வழிபாடு

அயோத்தியில் ராமர் நெற்றியில் சூரிய ஒளி விழுந்தது. இந்த வீடியோவை விமான பயணத்தின் போது 'டேப்'ல் பிரதமர் மோடி பார்த்து வழிப்பட்டார். இந்த புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.மேலும், ‛‛அயோத்தியில் ராமர் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி காட்சியை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. கோடிக்கணக்கான இந்தியர்களைப் போலவே எனக்கும் இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்த சூரிய திலகம் வளர்ந்த இந்தியாவின் ஒவ்வொரு தீர்மானத்தையும் அதன் தெய்வீக ஆற்றலால் ஒளிரச் செய்யும்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

கனோஜ் ஆங்ரே
ஏப் 17, 2024 17:58

இதெல்லாம் கண்டுபிடிச்சதே நாங்கதான், நாங்கன்னா தமிழ்நாடுதான் தமிழ்நாட்டில் எத்தனை கோவில்களில் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் மூலஸ்தான சுவாமியின் நெற்றியில் விழுதுன்னு தெரியுமா?


surya krishna
ஏப் 17, 2024 17:42

Jai sri Ram


கனோஜ் ஆங்ரே
ஏப் 17, 2024 17:19

இதையெல்லாம் தமிழன் கண்டுபிடிச்சு ஆயிரம் ஆண்டுகள் மேலே ஆகுது தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் அமைந்துள்ள சங்கரநாராயணன் கோயில் வேலூர் மாவட்டம் திருவலம் அருகே சேர்க்காட்டில் உள்ள விண்ணம்பள்ளி கிராமத்தில் உள்ள சிவன்கோவில் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் உள்ள ஆதிமூலேஸ்வரர் சிவன் கோவில் திருச்சி சர்க்கார் பாளையத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் திருச்சி மாவட்டம், திருப்பட்டூர் பிரம்பபுரீஸ்வரர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் கொங்கணீஸ்வரர் கோவில் சிவலிங்கத்தின்மீதும் இன்னும் சொல்லட்டுமா தமிழ்நாட்டில் உள்ள லிஸ்ட்ட சொன்னா சாமியின் நெற்றியில் சூரியன் விழுற கதையெல்லாம் சொன்னவங்க தமிழனுங்க அதை செயல்படுத்தி காட்டியதும் தமிழனுங்க தமிழ்நாட்டுக்காரன்கிட்ட இதையெல்லாம் சொல்லாதீங்க தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இது போன்ற சூரியஒளி சிவன்மீது விழுதுன்னு கேள்விபட்டுதான் அதைப்போலவே ராமர் கோவிலிலும் விழ வேண்டும்னு கட்டிடத்தை கட்டினார்கள்


hari
ஏப் 17, 2024 17:16

இது என்ன பிரமாதம்.....


Francis
ஏப் 17, 2024 16:28

இந்த அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த நிகழ்வு பல ஆண்டுகள் முன்பாகவே தமிழ் நாட்டின் கன்னியாகுமரியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவு மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது


kuppusamy india
ஏப் 17, 2024 16:13

ஜெய் ஸ்ரீ ராம்.......


செந்தமிழ் கார்த்திக்
ஏப் 17, 2024 16:11

கோவில் கட்டிட வடிவமைப்பு அப்படி ஏற்படுத்த பட்டுள்ளது அவ்வளவே தான் பாருங்க


J.V. Iyer
ஏப் 17, 2024 16:09

ராம், ராம், ஜெய் ராம், ஜெய் ஸ்ரீ ராம் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு விடிவுகாலம் சீக்கிரம் வரட்டும் பெருமாளே


sankarkumar
ஏப் 17, 2024 16:00

கட்டிட கலையின் சிறப்புகள் இந்த பாராட்டுகள் அனைத்தும் சிற்பிகளையே சாரும் ஜெய் ஸ்ரீராம்


Oviya Vijay
ஏப் 17, 2024 15:01

காதில் பூ சுற்றும் வேலை...


Murugesan
ஏப் 17, 2024 15:59

முதல்ல என்ன எழுதி இருக்காங்க என்று படி , திராவிட திமுக நாதாரிங்க அடிமைகள்


sankarkumar
ஏப் 17, 2024 16:01

வெங்காய குழுவை சேர்ந்தவரா நீர் விளங்கிடும்


Sugadev Srinivasan
ஏப் 17, 2024 16:07

அந்த வேலையை செஞ்சிட்டு இருக்கறது திமுக தான் என்ன காதுல பூக்கூடையையே சுத்தனது கூட தெரியாம கதறிட்டு இருக்கலாம்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி