மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
7 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
7 hour(s) ago
பெங்களூரு: ம.ஜ.த., தொண்டரான இளைஞரை, பாலியல் வன்முறை செய்தது தொடர்பாக, ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில், எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா மீது வழக்குப் பதிவானது. ஜூன் 22ல் இவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை, சி.ஐ.டி.,யிடம் அரசு ஒப்படைத்தது.இவரை மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவரை எட்டு நாட்கள், சி.ஐ.டி., கஸ்டடியில் விசாரிக்க நீதிமன்றம் ஒப்படைத்தது. இவரது கஸ்டடி நேற்று முடிந்ததால், சூரஜ் ரேவண்ணாவை மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சி.ஐ.டி., போலீஸ் கஸ்டடியை, மேலும் இரண்டு நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாலியல் வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணாவின் போலீஸ் கஸ்டடியை, மேலும் இரண்டு நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 hour(s) ago | 1
7 hour(s) ago