உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிறுத்தப்பட்ட ஜாமின்: கெஜ்ரிவால் அப்பீல்; உச்சநீதிமன்றம் கைவிரிப்பு

நிறுத்தப்பட்ட ஜாமின்: கெஜ்ரிவால் அப்பீல்; உச்சநீதிமன்றம் கைவிரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட் கடந்த ஜூன் 20ம் தேதி ஜாமின் வழங்கிய நிலையில், அதனை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. டில்லி ஐகோர்ட் ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=enrts0nc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல் முறையீடு செய்தார். இந்த மனு இன்று(ஜூன் 24) உச்சநீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற உத்தரவின் முழு விவரம் கிடைத்த பின்பே மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூன் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M Ramachandran
ஜூன் 24, 2024 19:08

அப்பாடா ஒரு தீய சக்தியை முடக்கி வைத்துள்ளார்கள் இனொரு தீய சக்தியால் டெங்கு கொசுக்கள் விஷ கிரிமகள் ஏரளமாக பரவி விட்டதெ


Krishna Gurumoorthy
ஜூன் 24, 2024 18:23

ஒரு முறை ஜாமீன் கொடுத்து கையை சுட்டுக் கொண்ட உச்சநீதிமன்றம் மற்றொரு முறை அந்த பக்கமே போகாது


SUBRAMANIAN P
ஜூன் 24, 2024 17:44

உலகத்திலேயே ரொம்ப ரொம்ப நல்லவங்க இருக்கக்கூடிய நீதிமன்றம்


Balasubramanian
ஜூன் 24, 2024 16:27

நாம் நேற்றே இப்பகுதியில் பதிவு செய்து விட்டோம்! ஊத்திக்கும் என்று!


Iniyan
ஜூன் 24, 2024 16:24

கண்டிப்பாக உச்ச நீதிமன்றம் ஜாமீன் கொடுக்கும். இந்த ஜாமீன் மறுப்பு எல்லாம் நாடகம்.


Alagusundram KULASEKARAN
ஜூன் 24, 2024 15:52

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை