உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக 

இன்று இனிதாக 

ஆன்மிகம்

96ம் ஆண்டு விழா

l கங்கம்மா தேவி 96ம் ஆண்டு விழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள், ஊர்வலம். நேரம்: காலை 9:30 மணி: சுமங்கலி பூஜை; மதியம் 12:00 மணி: பெங்களூரு கோதண்டராமபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அன்னதானம்; மாலை 5:30 மணி: ரத உற்சவம் கோதண்டராமபுரம் பிரதான சாலை, வயாலிகாவல், குட்டஹள்ளி பிரதான சாலை, மல்லேஸ்வரம் 8 வது குறுக்கு, சம்பிகே பிரதான சாலை, காடு மல்லேஸ்வரா கோவில் வழியாக அதிகாலை 4:00 மணிக்கு கோவிலை வந்தடையும்; இரவு 7:00 மணி: கோவிலில் இருந்து கரகம் புறப்பட்டு சம்பிகே பிரதான சாலை, மல்லேஸ்வரம், வயாலிகாவல், குட்டஹள்ளி வழியாக அதிகாலை 4:00 மணிக்கு கோவிலை வந்தடையும். இடம்: ஓம் கங்கம்மா தேவி கோவில், 2வது கோவில் தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பெருவிழா

l புனித அந்தோணியார் பசலிகா தேவாலய பெருவிழா நடக்கிறது. நேரம்: காலை 7:00 மணி: ஆங்கிலம்; நண்பகல் 11:00 மணி; மாலை 5:30 மணி: கன்னடத்தில் திருப்பலி. மாலை 5:30 மணி: மைசூரு மறைமாவட்டம் பங்கு தந்தை, பொருளாளர், அருட்தந்தை செபஸ்டின் அலெக்சாண்டர் மறையுரை நிகழ்த்துகிறார். இடம்: புனித அந்தோணியார் பசலிகா தேவாலயம், தோரனஹள்ளி, மைசூரு.l நேரம்: காலை 7:00, 11:30 மணி, மாலை 6:30 மணி: தமிழிலும்; காலை 6:00, மாலை 5:00 மணி: ஆங்கிலத்திலும் நவநாள் திருப்பலி; மாலை 6:00 மணி: ஜெபமாலை திருபவனி. இடம்: துாய இருதய ஆண்டவர் தேவாலயம், ரிச்மென்ட் சாலை, பெங்களூரு.l நேரம்: மாலை 5:00 மணி: புனித அந்தோணியாரின் ஜெபமாலை பவனி, நவநாள் திருப்பலி, தமிழகம் மயிலாடுதுறை டான்பாஸ்கோ ஐ.டி.ஐ., மேலாளர் அருட்தந்தை டேனியல் மறையுரை நிகழ்த்துகிறார். இடம்: புனித அந்தோணியார் திருத்தலம், கோரமண்டல், கோலார் தங்கவயல்.பொது

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

l தங்கவயல் தாலுகா சட்ட சேவைக் குழு, வக்கீல்கள் சங்கம், வட்டார கல்வித் துறை, தொழிலாளர் நலத்துறை இணைந்து உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். வட்டார கல்வி அதிகாரி முனி வெங்கடராமாச்சாரி தலைமையில், நீதிபதி முசாபர் ஏ. மஞ்சரி துவக்கி வைக்கிறார். நீதிபதிகள் வினோத் குமார், சமீதா ஆகியோர் பங்கேற்கின்றனர். நேரம்: காலை 9:30 மணி. இடம்: அரசு கன்னட நடுநிலைப்பள்ளி, உரிகம்பேட்டை, தங்கவயல்.

மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி

l தோட்டக்கலை துறை சார்பில் மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லால்பாக் பூங்கா, பெங்களூரு.

களிமண் பயிற்சி

l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

ஓவிய பயிற்சி

l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

காமெடி

l தமாஷா கபே வழங்கும் ஜஸ்ட் ஜோக்ஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: தமாஷா கபே, 483, ஐந்தாவது பிளாக், கே.எச்.பி., காலனி, கோரமங்களா, பெங்களூரு.l பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் 'ஜோக்ஸ் இன் பிராகிரஸ்'. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை