உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவாலி அணை கட்டுவது குறித்து தெலுங்கானா, ஆந்திராவுடன் பேச்சு

நவாலி அணை கட்டுவது குறித்து தெலுங்கானா, ஆந்திராவுடன் பேச்சு

பெங்களூரு; ''நவாலி அணை கட்டுவது குறித்து தெலுங்கானா, ஆந்திராவுடன் பேச்சு நடத்தப்படும்,'' என, துணை முதல்வர் சிவகுமார் சட்டசபையில் கூறினார்.சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பசனகவுடா தத்தல், அல்லம்பிரபு பாட்டீல் கேட்ட கேள்விக்கு, துணை முதல்வர் சிவகுமார் அளித்த பதில்:துங்கபத்ரா அணையில் வண்டல் மண் படிந்து 27 டி.எம்.சி., தண்ணீர் வீண் ஆகிறது. இந்த தண்ணீரை நல்ல முறையில் பயன்படுத்த, நவாலி அணை கட்டுவது குறித்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுடன் பேச்சுக்கு பின், நடவடிக்கை எடுக்கப்படும்.துங்கபத்ரா அணையின் இடதுகரை கால்வாய் வழியாக, கடைமட்ட பகுதிகளுக்கு நீர் செல்வது இல்லை என்பதை பரிசீலனை செய்வோம்.பீமா நதி திட்டத்தின் கீழ், பென்னத்துார் மற்றும் பிற நீர்பாசன திட்டங்கள் மூலம் கலபுரகிக்கு நீர்ப்பாசன வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி