உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டேங்கர் மாபியா: போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ., மனு

டேங்கர் மாபியா: போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ., மனு

புதுடில்லி:டில்லிக்கு வரும் முனாக் கால்வாயில் இருந்து தண்ணீர் திருடும் டேங்கர் மாபியா மீது நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ., தலைவர்கள் மனுக் கொடுத்துள்ளனர்.டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா, வடமேற்கு டில்லி எம்.பி., யோகேந்திர சந்தோலியா நேற்று டில்லி போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:முனாக் கால்வாய் உள்ளிட்ட டில்லி நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் திருடும் டேங்கர் மாபியா குறித்து விசாரணை நடத்த வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் இந்த தண்ணீர் திருட்டுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வசதியாக சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.டில்லி மக்களின் தண்ணீர் உரிமையை பறிக்கும் டேங்கர் மாபியாவை கட்டுப்படுத்த தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 13, 2024 11:48

இந்த டேங்கர் மாபியா கர்நாடகாவின் பெங்களூரிலும் தலைவிரித்து ஆடுகிறது. மற்ற நாட்களில் ரூபாய் நானூறு அல்லது ஐநூறுக்கு விற்கப்படும் ஒரு டேங்கர் தண்ணீர், கோடைகாலத்தில் இரட்டிப்பாக விற்கப்படுகிறது. அதுவும் கேட்டவுடன் கிடைப்பதில்லை. ரயில்களில் அட்வான்ஸ் புக்கிங் மாதிரி, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னாள் டேங்கர் தண்ணீர் புக் செய்யவேண்டும். கேவலமான காங்கிரஸ் அரசு. வெட்கம். வேதனை.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ