உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமியை பலாத்காரம் செய்து கால்வாயில் வீசிய சிறுவர்கள்

சிறுமியை பலாத்காரம் செய்து கால்வாயில் வீசிய சிறுவர்கள்

நந்தியால், ஆந்திராவில் 8 வயது சிறுமியை, அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் கூட்டு பலாத்காரம் செய்து, கொன்று கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவின் நந்தியால் மாவட்டத்தில் உள்ள மச்சுமாரி கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 7ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், கிராமத்தில் உள்ள வாய்க்காலில் சிறுமியின் உடல் கிடந்ததை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சிறுமி படிக்கும் பள்ளியில் பயிலும் 13 - 14 வயது வரையிலான சிறுவர்கள் மூன்று பேர், சிறுமியை ஆள் அரவமற்ற இடத்துக்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அது மட்டுமின்றி சிறுமியை கொன்று, அங்குள்ள கால்வாயில் அவர்கள் வீசி சென்றதும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை தர வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

JeevaKiran
ஜூலை 18, 2024 14:24

போக்ஸோ சட்டத்தில் இன்னும் சரியான தண்டனையை வழங்க வில்லை. அதனால்தான் இதுபோன்ற குற்றங்கள் தினந்தோறும் நடைபெற்று கொண்டிருக்கிறது.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ