உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.ஏ.எஸ்., ஆக வந்த மகள்: சல்யூட் அடித்து வரவேற்ற தந்தை

ஐ.ஏ.எஸ்., ஆக வந்த மகள்: சல்யூட் அடித்து வரவேற்ற தந்தை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தெலுங்கானா போலீஸ் அகாடமிக்கு ஐ.ஏ.எஸ்., ஆக பயிற்சி பெற வந்த தன் மகளுக்கு அகாடமியின் துணை இயக்குனர் எஸ்.பி., வெங்கடேஷ்வரலு, சல்யூட் அடித்து வரவேற்பு தந்த புகைப்படம் இணையத்தில் பரவியது.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அம்மாநில போலீஸ் அகாடமி உள்ளது. இந்த அகாடமியின் துணை இயக்குனராக போலீஸ் எஸ்.பி., வெங்கடேஷ்வரலு பொறுப்பு வகிக்கிறார். இவரது மகள் உமா ஹாரத்தி ஐ.ஏ.எஸ்., ஆக தேர்ச்சி பெற்று தற்போது பயிற்சி அதிகாரியாக உள்ளார். ஐ.ஏ.எஸ்., பயிற்சியின் ஒரு பகுதியாக இவர்கள் மாநில போலீஸ் அகாடமியில் சில நாட்கள் பயிற்சி பெற வேண்டும். இந்த பயிற்சியின் வாயிலாக போலீஸ் அகாடமியின் பங்கு, பயிற்சி முறை மற்றும் போலீசாரை பணிக்கு தயார்படுத்துவதில் உள்ள பிற முக்கிய அம்சங்கள் குறித்த அனுபவத்தை பயிற்சி ஐ.ஏ.எஸ்.,கள் பெறுவர்.இதற்காக நேற்று தெலுங்கானா மாநில போலீஸ் அகாடமிக்கு பயிற்சி ஐ.ஏ.எஸ்., உமா ஹாரத்தி வந்தார். அவரை அவரது தந்தையும், போலீஸ் அகாடமியின் துணை இயக்குனருமான எஸ்.பி., வெங்கடேஷ்வரலு சல்யூட் அடித்து பெருமையுடன் வரவேற்றார். பின் இருவரும் போலீஸ் அகாடமி நிகழ்வில் சக அதிகாரிகளுடன் பங்கேற்றனர். இந்த புகைப்படங்கள் தந்தையர் தினமான நேற்று சமூக வலைதளங்களில் அதிகம் பரவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

mayavan
ஜூன் 18, 2024 12:28

தான்பெற்ற மக்களை பெருமையுடன் வரவேற்கும் தந்தை மகிழ்ச்சி தரும் படைப்பு


Balaji Radhakrishnan
ஜூன் 17, 2024 15:59

IAS மகளுக்கு வாழ்த்துக்களை. மகளுக்கு சல்யுட் அடிக்கும் தந்தைக்கு வாழ்த்துகள்.


S.kausalya
ஜூன் 17, 2024 12:20

எங்க ஊரிலேயும் நாளைக்கு நடக்கும் பாருங்கள். மகன் முதல்வர், பேரன் துணை முதல்வர், தந்தை குடும்பத்துடன் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு குடுப்பாங்க பாருங்க. அடிப்பொடிகள் பல்லக்கு தூக்கி வந்து விசிலடித்து கொண்டாடுவான்க


Raa
ஜூன் 17, 2024 11:29

வாழ்த்துக்கள். ஒரு தந்தை பல வருடங்களாக எதிர்பார்க்கும் தருணம். ஆனால் பயிற்சிக்கு வரும் IAS ஆபீஸருக்கு சல்யூட் அடிக்கவேண்டிய அவசியம் இல்லை.


mayavan
ஜூன் 18, 2024 12:31

அந்த தகப்பனின் உணர்வகளை கொச்சை படுத்த வேண்டாம்


VENKATESAN V
ஜூன் 17, 2024 10:55

மிக மிக அருமையான தருணம். கிடைத்தற்கு அறிய சந்தர்ப்பம். மிக்க மகிழ்ச்சி. ஆனால் மகள் பயிற்சி பெற வந்தவர் ஆனால் salute அடிப்பவர் தந்தை பயிற்சி நிறுவனத்தின் துணை தலைவர். பயிற்சி பெற வந்தவர்தான் அவருக்கு salute அடித்திருக்க வேண்டும்.


SRINIVASAN
ஜூன் 17, 2024 21:48

ரூல்ஸ் பார்க்க வேண்டிய இடத்திலெல்லாம் கோட்டை விடுவது. இது தந்நை மகள் பந்தம் வீடோ பொதுவோ


INDIAN
ஜூன் 17, 2024 10:34

அருமை


samvijayv
ஜூன் 17, 2024 10:23

மிக சிறப்பான ஒரு தருணம், நல் வாழ்த்துக்கள்.


Sureshkumar
ஜூன் 17, 2024 09:41

அருமையான நிகழ்வு . வாழ்த்துக்கள்.


S S
ஜூன் 17, 2024 09:20

இது போன்று மிக சிலருக்கு மட்டுமே அமையும். தந்தைக்கும் மகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்


subramanian
ஜூன் 17, 2024 08:39

நாட்டிற்கும், இவர்களுக்கும் நன்மை ஏற்பட வேண்டும்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி