உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் மனைவிக்கு மனை ஒதுக்கீடு விசாரணை கமிஷன் அமைத்தது அரசு

முதல்வர் மனைவிக்கு மனை ஒதுக்கீடு விசாரணை கமிஷன் அமைத்தது அரசு

பெங்களூரு : முதல்வர் சித்தராமையா மனைவிக்கு, முறைகேடாக மனை ஒதுக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.தேசாய் தலைமையில் தனி நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.'மூடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு முறைகேடாக மனை ஒதுக்கியதாக, பா.ஜ., - ம.ஜ.த., குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், தன் மச்சான், தானமாக வழங்கியதாக முதல்வர் தெரிவித்தார். ஆனால், முறைகேடாக வழங்கிய மனை தான் என்று கூறி, பா.ஜ., தரப்பில் போராட்டம் நடத்தி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தினர்.இதற்கிடையில், இன்று சட்டசபை கூட்டத்தொடர் துவங்குவதால், மூடா முறைகேடு குறித்து கேள்வி எழுப்பி அரசை திணறடிக்க எதிர்க்கட்சியினர் தயாராகி உள்ளனர்.இந்நிலையில், எதிர்க்கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.தேசாய் தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து, உள்துறை அமைச்சகம் நேற்றிரவு திடீரென உத்தரவிட்டது.இந்த கமிஷன், ஆறு மாதங்களுக்குள் விசாரணை முடித்து, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு, மைசூரு நகர வளர்ச்சி ஆணையம், மாநில நகர வளர்ச்சி துறை முழு ஒத்துழைப்பு தரும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Krishnamurthy Venkatesan
ஜூலை 15, 2024 21:19

ஆறு மாதம் என்பது மிக மிக அதிகம். ஆறு வாரங்களில் முடிக்க முடியும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இரு தரப்பு வாதங்களையும், சார் பதிவாளர் மூலம் பெறப்பட்ட டாக்குமெண்ட்ஸ், அவர்களின் STATEMENT இவற்றை முடிக்க ஆறு மாதம் மிக மிக மிக ATHIGAM.


sankaranarayanan
ஜூலை 15, 2024 21:11

மூடா செய்கை கேடாய் விளங்கிற்று முதல்வருக்கு மூடாவினால் கேடுகள் வரப்போகின்றன இதை முன்கூட்டியே எதிர்க்கட்சிகள் கையிலெடுத்துளன


c.k.sundar rao
ஜூலை 15, 2024 10:24

Retired judges heading a commission will always give report in favour of the government.


Vijayakumar Srinivasan
ஜூலை 15, 2024 21:27

உண்மை தான் சார்.நம்மைபோலதான்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை