உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயிலில் வந்தது ஆட்டிறைச்சி மூன்று ஆய்வகங்கள் உறுதி

ரயிலில் வந்தது ஆட்டிறைச்சி மூன்று ஆய்வகங்கள் உறுதி

பெங்களூரு: 'ராஜஸ்தானில் இருந்து பெங்களூருக்கு ஆட்டு இறைச்சி தான் வந்தது. நாய் இறைச்சி அல்ல' என, மூன்று ஆய்வகங்கள் உறுதி செய்துள்ளன.பெங்களூரின் கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்துக்கு, ஜூலை 26ம் தேதி இரவு வந்த ஜெய்ப்பூர் - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலில், 4,500 கிலோ இறைச்சி வந்தது. இதை அப்துல் ரசாக் என்பவர் வரவழைத்திருந்தார். இந்த இறைச்சியில், நாய் இறைச்சி கலந்துள்ளதாக ஹிந்து அமைப்பினர் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர்.இதை தீவிரமாக கருதிய உணவு பாதுகாப்பு மற்றும் தரம் கட்டுப்பாட்டு துறை, இறைச்சி மாதிரியை, ஹைதராபாதின் தேசிய இறைச்சி பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பியது. இங்கு நடத்தப்பட்ட ஆய்வில், ஜெய்ப்பூரில் இருந்து அனுப்பப்பட்டது, ஆட்டிறைச்சி என்பது உறுதியாகியுள்ளது. முக்கியமான மூன்று ஆய்வகங்களில் நடத்திய ஆய்வகத்திலும், இது போன்ற அறிக்கை வந்துள்ளது.இறைச்சியை நன்றாக வேகவைத்து பயன்படுத்தும்படி, உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டு துறை அறிவுறுத்திஉள்ளது.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:ஜெய்ப்பூரில் இருந்து வந்த இறைச்சியை முக்கியமான மூன்று ஆய்வகங்களில் பரிசோதனைக்கு அனுப்பினோம். அது ஆட்டிறைச்சி என, அறிக்கை வந்துள்ளது. இந்த ஆய்வகங்கள் இறைச்சியை சாப்பிடுவோருக்காக, சில ஆலோசனைகளை கூறியுள்ளன.இறைச்சியில் பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதால், நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வேக வைத்த பின் சாப்பிட வேண்டும். அரைகுறையாக வெந்ததை சாப்பிடுவது நல்லது அல்ல என, அறிவுறுத்தியுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை