மேலும் செய்திகள்
கவாய் மீதான தாக்குதல் இந்தியரை கோபப்படுத்தி உள்ளது: பிரதமர் மோடி
2 hour(s) ago | 4
புதுடில்லி: நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த திரவுபதி முர்மு, டில்லியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நேற்று பாடம் நடத்தினார்.நாட்டின் 15வது ஜனாதிபதியாக, 2022 ஜூலை 25ல் திரவுபதி முர்மு பொறுப்பேற்றார். அதற்கு முன், 2015 - 21 வரை ஜார்க்கண்ட் கவர்னராக பொறுப்பு வகித்தார். ஜனாதிபதியாக முர்மு பொறுப்பேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்த நாளை பள்ளி மாணவர்களுடன் அவர் செலவிட்டார்.டில்லி, ஜனாதிபதி எஸ்டேட்டில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு நேற்று காலை சென்ற முர்மு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கான முக்கிய நடவடிக்கைகளாக, தண்ணீர் சேமிப்பு மற்றும் காடு வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுடன் உரையாடினார்.அப்போது அவர் பேசியதாவது:பருவநிலை மாற்றத்தின் அபாயம் குறித்து நீங்கள் அறிவீர்கள். அதை எதிர்த்து போராட நிறைய மரக்கன்றுகளை நட வேண்டும். தண்ணீர் வீணடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழைநீர் சேமிப்பு வாயிலாக தண்ணீரை நாம் சேமிக்க வேண்டும்.உங்கள் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மரக்கன்றுகளை நடுவதை வழக்கமாக கொள்ளுங்கள். அது தான் நம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும்.உங்களுடன் உரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.இவ்வாறு அவர் பேசினார்.
2 hour(s) ago | 4