உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மழை காலத்திலும் இளநீர் விலை கிடுகிடு

மழை காலத்திலும் இளநீர் விலை கிடுகிடு

பெங்களூரு : கோடைக் காலத்தில் இளநீர் விலை அதிகரிப்பது சகஜம். ஆனால் மழைக் காலத்திலேயே 60 முதல் 70 ரூபாய் வரை இளநீர் விற்பனையாகிறது.இளநீர் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதே காரணத்தால், பலரும் இளநீரை விரும்பி அருந்துவர். பொதுவாக உடல் சூட்டைத் தணித்து, குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்பதால், கோடைக் காலத்தில் பெரும்பாலானோர் இளநீர் அருந்துவர். இதனால் விலை அதிகரிக்கும்.மழை மற்றும் குளிர் காலத்தில் இளநீர் பயன்பாடு குறைவாக இருக்கும். இதனால் கைக்கு எட்டும் விலையில் இளநீர் கிடைக்கும். ஆனால் இம்முறை பரவலாக மழை பெய்தும் இளநீர் விலை குறையவில்லை. மாறாக அதிகரித்துள்ளது. கோடைக் காலத்தில் 60 முதல் 70 ரூபாயை தாண்டியது. அதன்பின் 45 ரூபாயாக குறைந்தது.தற்போது மீண்டும் விலை ஏறுமுகமாகி, 60 ரூபாயை எட்டியுள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.நடப்பாண்டு கோடைக் காலத்தில், வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. வறட்சி வாட்டி வதைத்தது. 200க்கும் மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சியால் பாதிப்படைந்தன. பயிர்களும் தண்ணீர் இல்லாமல் வாடின.இளநீர் விளைச்சலும் குறைந்துள்ளது. தற்போது அளவுக்கு அதிகமான மழை பெய்வதாலும், தென்னைகள் சேதமடைந்து மார்க்கெட்டுகளுக்கு வரத்து குறைந்தது. இதனால், விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. தற்போதைக்கு விலை குறைய வாய்ப்பில்லை என, கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை