உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எமர்ஜென்சியில் கைதை தவிர்க்க மாறுவேடத்தில் சுற்றிய பிரதமர்

எமர்ஜென்சியில் கைதை தவிர்க்க மாறுவேடத்தில் சுற்றிய பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

எமர்ஜென்சி காலத்தின்போது, போலீசார் கைது செய்வதில் இருந்து தப்பிக்க, சர்தார்ஜி, ஸ்வாமிஜி என பல வேடங்களைப் போட்டு, பிரதமர் நரேந்திர மோடி தப்பியுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.

பேச்சு சுதந்திரம்

கடந்த, 1975ல் அப்போதைய காங்கிரஸ் பிரதமர் இந்திரா, நாட்டில் எமர்ஜென்சி எனப்படும் அவசர நிலையை அறிவித்தார்.இதையடுத்து, நாடு முழுதும் பேச்சு சுதந்திரம் உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்பட்டன. ஜனநாயகத்தின் இருண்ட பக்கங்களாக அந்த காலம் குறிப்பிடப்படுகிறது. தொடர்ந்து, 21 மாதங்களுக்கு அவசர நிலை நடைமுறையில் இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q0u7dzu3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராக பேசுவோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நேரத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் பிரதமர் மோடி இருந்தார். எமர்ஜென்சிக்கு எதிராக மக்களைத் திரட்டும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ்., ஈடுபட்டிருந்தது. அதனால், அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், போலீசில் சிக்காமல் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.அந்த நேரத்தில், குஜராத்தின் பல பகுதிகளுக்கு பிரதமர் மோடி சுற்றி வந்து, எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு திரட்டி வந்தார்.

பிரசாரம்

போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக, சர்தார்ஜி, ஹிந்து சாமியார் என, பல வேடங்களை அவர் போட்டுள்ளார்.போலீசாரிடம் சிக்காமல், இயக்கத்துக்கான பிரசாரத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.சிறையில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளையும் மாறுவேடத்தில் சென்று அவர் சந்தித்துள்ளார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Ranganathan PK
ஜூன் 27, 2024 00:30

1967இல் திமுகவுடன் ஸ்வதந்திரா கட்சி கூட்டு வைத்ததற்காக நாம் எல்லோரும் ராஜாஜியை தூற்றுகிறோம். அப்போது தமிழகத்தில் காமராஜரின் நிலைமை என்ன? 1966 இலேயே காமராஜர் தங்கத்தட்டில் இந்திய பிரதம மந்திரி பதவியை இந்திராவுக்கு தூக்கிப் பிடித்துக் கொடுத்தார் அய்யாவுக்கு தெரியாதா இந்திராவின் குணங்கள்? பழுத்த காந்தியவாதியான மொரார்ஜி தேசாய் அவர்களை ஒதுக்கிவிட்டு இந்திராவை எதற்கு ஆதரித்தார்? 1967இல் காங்கிரஸ் ஜெயித்தால் தான் மீண்டும் CM ஆக வரமுடியும் என்று நினைத்தார். ஆனால் இந்திரா அவருக்கு பிடித்த சி. சுப்ரமணியத்தை ஆதரித்தார். இதைப் பயன்படுத்திக் கொண்ட அண்ணாதுரை ராஜாஜியுடன் கூட்டு வைத்துக்கொண்டார் காமராஜர் செய்தது வரலாற்று தவறு. ராஜாஜி செய்தது மாபெரும் தவறு


ராது
ஜூன் 26, 2024 14:21

காமராஜர் இந்திரா என்னும் தங்க ஊசியை தன் கண்ணில் குத்திக் கொண்டு தினம் - வெள்ளை காந்தி படேலை தள்ளி நேருவை பிரதமராக ஆக்கினார் - கறுப்பு காந்தி காமராஜர் மொரார்ஜி தேசாய் தள்ளி இந்திராவை பிரதமராக்கி வாரிசு சொத்தாக பாரதத்தை பதவி வெறி கொண்ட குடும்பததிற்கே தாரைவாரத்தார் - இருக்கும் இந்தியாவை எங்கே அடமானம் வைத்தாரோ


Ramaswamy
ஜூன் 26, 2024 12:48

சுதந்திரபோராட்டம் போதும், எமெர்கென்சி சமயமும் திரு ஸ்டாலின் நாட்டுக்கு படாத பட்டுள்ளார்.


Ramaswamy
ஜூன் 26, 2024 12:44

எமெர்கென்சி என்ற பெயரில் இந்திரா பண்ணிய அநியாயம் கொஞ்ச நஞ்ச மில்லை. ராகுல் வெக்கமில்லாமல் சட்ட புத்தகத்தை கையில வெச்சு மக்கள ஏமாத்துறார். நேரு காலம் முதல் நாடு ஹிந்து மதத்தை அழிக்க ஆரம்பித்துள்ளது.


S MURALIDHARAN
ஜூன் 26, 2024 08:49

எமர்ஜெண்சி காலத்தில் ஸ்டாலின் பாடாத கஸ்ட்மா மோடி பட்டார் .


ஆரூர் ரங்
ஜூன் 26, 2024 12:48

அதற்குக் காரணம் மிசா அல்ல. வேறு ஏதோ..


R SRINIVASAN
ஜூன் 26, 2024 07:48

கள்ளக்குறிச்சி சாராய சாவுகளுக்கு நேரில் வந்து ஆறுதல் கூறவில்லை. கண்டனமும் தெரிவிக்கவில்லை .இந்த தேசப்பத்ரு இல்லாத ராகுல் இந்தியாவின் பிரதமரானால் இந்தியாவை கூறு போட்டு வித்ருவிடுவார்கள்


venugopal s
ஜூன் 26, 2024 05:26

அடிச்சு விடுங்க, காசா பணமா?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 26, 2024 10:57

மிசாவில் கைதா அல்லது????


Sankar Ramu
ஜூன் 26, 2024 03:14

திமுக வில் ஒரே குடும்பத்தில் இருப்பவர்களே கட்சி தலைமைய குடும்ப பிஸினஸ் போல இருப்பதுதான் குடும்ப அரசியல். மந்திரி , எம் எம் ஏ ஒரு குடும்பத்தில் இருந்தாலோ. குடும்பத்தில் அனைவரும் ஒரே கட்சியில் இருந்தாலோ குடும்ப அரசியல் இல்ல.


மோடி தாசன்
ஜூன் 26, 2024 00:46

நாடி நரம்பு இரத்தம் எல்லாம் தேசம் தேசம் என்று ஊறி இருந்த ஒரு தேச பக்தன் இல்லை தேச வெறியரால் தான் இப்படி எல்லாம் செயல்பட முடியும். அரசியல் சாசன காவலரை, அதனை அழிப்பவர் என்று இன்டி கூட்டணி சித்தரிக்க முயலுவதால், இந்த செய்தி வெளி வந்து ஐயாவின் மதிப்பு மேலும் கூடியுள்ளது. இந்தி கூட்டணிக்கு நன்றி, அடுத்த ஜந்தாண்டும் இதே மாதிரி செயல்பட்டு 4.0 ல் 400 யை உறுதி செய்யுங்கள்


வல்லவன்
ஜூன் 25, 2024 22:53

அப்பவும் நடிப்பு, இப்பவும் நடிப்பு, எப்பவுமஂ நடிப்பு!!!


Shyam Venkat
ஜூன் 26, 2024 13:57

கருணாநிதி விட வா நடிச்சுரப்போறாங்க


மேலும் செய்திகள்











புதிய வீடியோ