உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன் விரோதத்தில் ரவுடி வெட்டி கொலை

முன் விரோதத்தில் ரவுடி வெட்டி கொலை

தட்சண கன்னடா: உல்லால் கடப்புரைச் சேர்ந்தவர் சமீர், 35. நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், தனது தாயுடன், கல்லாப்புவில் உள்ள உணவகம் ஒன்றிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்களை பின்தொடர்ந்து காரில் வந்த ஐந்து பேர் கும்பல், சமீரை அரிவாளால் வெட்டியது.அங்கிருந்து சமீர் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அக்கும்பல், அவரை விரட்டிப் பிடித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றது.விசாரணையில், 2018ல், ஜெப்பு என்ற இடத்தைச் சேர்ந்த ரவுடி டார்கெட் இலியாசை, அவரது வீட்டிற்குள் புகுந்த கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. இந்த வழக்கில் கைதான சமீர், ஜாமினில் வெளியில் இருந்தார். இலியாஸ் கூட்டாளிகள் பழிக்குப்பழி வாங்க திட்டமிட்டு, சமீரை கொலை செய்தது தெரிந்தது. தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை