உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புனித நீருடன் தாஜ்மஹாலுக்குள் நுழைய முயன்ற பெண்

புனித நீருடன் தாஜ்மஹாலுக்குள் நுழைய முயன்ற பெண்

புதுடில்லி: கன்வர் யாத்திரை புனித நீருடன் தாஜ்மஹாலுக்குள் நுழைய முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில், சிராவண மாதத்தில் ஆண்டுதோறும் கன்வர் யாத்திரை என்ற பெயரில் வட மாநில பக்தர்கள் பாத யாத்திரையாக உத்தரகண்டின் ஹரித்வாரில் இருந்து புனிதநீர் எடுத்துச் சென்று தங்கள் ஊரில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வர். இந்த ஆண்டுக்கான கன்வர் யாத்திரை ஜூலை 22 முதல் ஆக., 6 வரை நடக்கிறது.இந்நிலையில் கங்கையிலிருந்து புனித நீர் எடுத்துக்கொண்டு கன்வார் யாத்திரயாக ‛ஆக்ரா' வந்த பெண் ஒருவர் உலக அதிசய சின்னமான தாஜ்மஹால் மேற்கு நுழைவு வாயில் வழியாக நுழைய முயன்றார்.அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அப்பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் தன் பெயர் மீரா ரத்தோர் எனவும், அகில பாரத இந்து மகாசபா அமைப்பின் தலைவர் எனவும், சிவன் தன் கனவில் தோன்றி தாஜ்மஹாலில் சிவலிங்கம் இருப்பதாகவும், கங்கையில் புனித நீர் எடுத்து கன்வர் யாத்திரை மேற்கொண்டு அபிஷேகம் செய்ய தனக்கு உத்தரவிட்டதாகவும் கூறினார். இதனை ஏற்காத போலீசார் அப்பெண்ணை சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

venugopal s
ஜூலை 30, 2024 07:56

அடுத்த தேர்தலுக்கான டார்கெட் ஆக தாஜ்மஹாலை ஃபிக்ஸ் பண்ணி விட்டீர்களா?


Kasimani Baskaran
ஜூலை 30, 2024 05:35

கனவில் சிவன் வந்தார் என்பதற்கு ஆதாரமில்லை என்று திருப்பி அனுப்பி விட்டது போல தெரிகிறது. நாளை யாராவது நாலு கோவில் தூண்களை கண்டுபிடித்து இது இந்துக்கோவில் என்றாலும் கூட திருப்பி அனுப்பி விடுவார்கள். சிவன் கோவிலை இடித்து அதை கல்லறையாக்கியத்தில் இந்தியாவில் பெருமையே மங்கிப்போய் விட்டது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி