உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானத்தில் குண்டு வச்சிருக்கோம் நடுவானில் வந்தது மிரட்டல்

விமானத்தில் குண்டு வச்சிருக்கோம் நடுவானில் வந்தது மிரட்டல்

திருவனந்தபுரம் மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வந்து கொண்டிருந்த, 'ஏர் இந்தியா' பயணியர் விமானத்துக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பயணியர் பீதியடைந்தனர்.மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு, 135 பயணியருடன் ஏர் இந்தியா விமானம் நேற்று காலை புறப்பட்டது.நடுவானில் வந்தபோது விமானத்தின் கழிப்பறையில் இருந்த, 'டிஷ்யு பேப்பரில்,' விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் எழுதப்பட்டிருந்தது.இதனால் பயணியர் பீதியடைந்தனர். இது பற்றி அறிந்த பைலட், விமான நிலைய கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.திருவனந்தபுரம் விமான நிலையம் முழுதும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு, தனி இடத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த பயணியர் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் விமானம் முழுதும் சோதனையிட்டனர். இதில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.எனினும், மிரட்டல் புரளியா என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.இதையடுத்து, நேற்று பகல் 12:10 மணியளவில் விமான நிலையத்தில் விதிக்கப்பட்ட அவசரநிலை வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து மற்ற விமானங்கள் இயங்க துவங்கின. வெடிகுண்டு மிரட்டலால் பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ