உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொள்ளை அடிக்கிறாங்க... என்னால முடியல : உடைந்தது ஐ.ஏ.எஸ்., மாணவியின் கனவு

கொள்ளை அடிக்கிறாங்க... என்னால முடியல : உடைந்தது ஐ.ஏ.எஸ்., மாணவியின் கனவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

மற்றொரு சம்பவம்

அண்மையில் டில்லியின் பழைய ராஜீந்தர் நகரில் பெய்த கனமழையால், ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதில், 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், அதே பகுதியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

மாணவி தற்கொலை

மகாராஷ்டிராவைச் சேர்ந்த அஞ்சலி என்னும் மாணவி டில்லியில் தங்கி ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படித்து வந்தார். ஆனால், அவருக்கு பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட மனவிரக்தியால், தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஜூலை 21ம் தேதி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் எழுதி வைத்த கடிதம் தற்போது சிக்கியுள்ளது.

மன்னித்து விடுங்கள்

அதில், தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்றும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவர் கடிதத்தில் எழுதியிருப்பதாவது: அம்மா, அப்பா, என்னை மன்னித்து விடுங்கள். வாழ்க்கையில் பிரச்னைகள் நிறைந்து இருக்கின்றன. நிம்மதி இல்லாததால் இந்த முடிவை எடுக்கிறேன். எனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும், எந்த முன்னேற்றமும் இல்லை.

கட்டணம் அதிகம்

யு.பி.எஸ்.சி., தேர்வை ஒரே முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது கனவு. ஆனால், நான் தற்போது நிலையற்று இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அதேபோல, மாணவர்கள் தங்கும் விடுதிகளின் கட்டணமும் அதிகமாக இருக்கிறது. எங்களைப் போன்ற மாணவர்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள். எனவே, இந்தக் கட்டணங்களை அரசு குறைக்க வேண்டும்,' என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Apposthalan samlin
ஆக 07, 2024 17:00

மத்திய அரசு தேர்வு என்றால் முறைகேடுகள் தான் என்று பரவலாக பேசப்படுகிறது neet இல் முறைகேடு upsc முறைகேடு .தேர்வுகள் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் .கஷ்ட பட்டு படித்து தேர்வு எழுதினால் முறைகேடு என்று கேள்வி பட்டால் என்ன அர்த்தம்


Sivagiri
ஆக 05, 2024 13:39

டாக்டர் வாரிசுகள் - ஈஸியா டாக்டர் ஆயிட்றாங்க - வக்கீல்-ஜட்ஜ் வாரிசுகள் ஈஸியா வக்கீல்-ஜட்ஜ் ஆயிட்றாங்க - கலெக்டர் / போலீஸ் / மில்டிரி / இப்டி அவங்க அவங்க வாரிசுகள் அந்த துறையில் நுழைஞ்சிடறாங்க , சிஎம் மகன்கள் சிஎம் / மினிஸ்டர் பசங்க மினிஸ்டர் / எம் எல் ஏ - எம்பி - கவுன்சிலர் - மேயர் பசங்க அப்டியே ஆயிட்றாங்க - - - எப்படி ? . .


Sathyanarayanan Sathyasekaren
ஆக 04, 2024 21:12

எத்தனையோ பேர் சொந்த முயற்சியிலேயே வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த அளவிற்கு கூட மனஉறுதி இல்லாதவர்கள் எப்படி ஒரு மாவட்டத்தை. அரசு உயர் பதவிகளை நிர்வகிக்க முடியும். ஐஏஸ் இந்த பெண்ணின் கனவாக கூட இருந்துஇருக்கலாம். தற்கொலை ஒரு முடிவல்ல. இவரது பெற்றோர் குற்ற உணர்ச்சியுடன் மீதி வாழ்க்கையை கடக்க வேண்டும். பாவம். இதனை சாக்காக வைத்துக்கொண்டு, புள்ளி வைத்த திருட்டு கும்பல், மத்திய அரசு மீது வெறுப்பை தூண்டிவிடும், பாராளுமன்றத்தில் வெளிநடப்பு நாடகங்களை நடத்தும். .


Jamal Mohamed
ஆக 04, 2024 11:17

பயிற்சி மையங்கள் என்ற பெயரில் மாணவர்களுக்கு பலவகையிலும் தொல்லை கொள்ளை கற்பழிப்பு தாய் தந்தைகளுக்கு பணமிழப்பு இதை அரசாங்கம் மூடி கீழ்தரமான பயிற்சியாளர்களை வேரோடு அழிக்க வேண்டும்


ஆரூர் ரங்
ஆக 04, 2024 11:06

கிம்பள ஆசைதான் பலரை ஈர்க்கிறது. பாஸ் பண்ணுவது கஷ்டம் என்றவுடன் ஆத்திரமும் அழுத்தமும். எத்தனையோ பேர் பயிற்சி மையங்களை நம்பாமல் தானாகவே படித்து ரேங்க் வாங்குவது இவர்களுக்குத் தெரியாதா?


JOTHIVELU NATARAJAN
ஆக 04, 2024 08:14

பயிற்சி மையங்கள் என்றாலே கொள்ளை கூடங்கள்தானோ தலைநகாிலேயே முறைப்படுத்த முடியவில்லையே


RAJ
ஆக 04, 2024 00:26

நெஞ்சு பொறுக்குதில்லையே.. அரசியல் ,.. அரசாங்க கொள்ளையர்களை நினைத்தால்.. வாழ வேண்டிய வயதில் ஒரு பூ வாடியது ஏன்?


ganapathy
ஆக 03, 2024 23:41

மாணவர்களே இப்படிப்பட்ட முட்டாள்களை பின்பற்றி வாழ்க்கையை வாழத்தெரியாமல் தொலைக்காதீர்கள்


ganapathy
ஆக 03, 2024 23:39

முட்டாள்தனமான முடிவு. வாழ்க்கை UPSC யைவிட முக்கியமானது. தனது கோழைத்தனத்திற்கு மற்றவரை குறை சொல்லும் நீ இப்ப என்ன சாதித்தாய்? வாழ்க்கையை வாழத்தெரியாமல் நாளை உபசக் தேர்வில் வென்றாலும் மற்ற ஏதோ ஒரு சப்பை காரணமாக தற்கொலை செய்துகொள்ளமாட்டாய் என நிச்சயம். உனது தற்கொலை எதையும் மாற்றவில்லை. ஒழுங்கா ஓட்டு போடுபவராக இருந்தால் ஒரு ஓட்டு குறைந்ததுதான் மிச்சம்


...
ஆக 04, 2024 12:04

அந்தப்பெண் தன் பெற்றோரை நினைக்கவில்லை


அப்பாவி
ஆக 03, 2024 23:04

இந்தியாவின் டிசைனே அடுத்தவங்களிடம் கொள்ளை அடிப்பதுதான். இவ்வளவு பணம் கட்டி பாஸ்பண்ணி வருபவர்கள் கொள்ளை அடிக்காமல் வேலை செய்வார்களாக்கும்?


மேலும் செய்திகள்