உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதம், பிரிவினைவாதம் கடும் அச்சுறுத்தல்கள்: பிரதமர் மோடி கவலை

பயங்கரவாதம், பிரிவினைவாதம் கடும் அச்சுறுத்தல்கள்: பிரதமர் மோடி கவலை

புதுடில்லி: 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளன' என பிரதமர் மோடி தெரிவித்தார்.உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ச்சி சார்ந்த அணுகுமுறையில் இந்தியா ஜி20யை முன்னெடுத்தது. உலகம் முழுவதும் நிச்சயமற்ற சூழல் உள்ளது. உணவு, சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வது பெரிய சவால்களாக உள்ளன. பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளன.

நட்பு நாடுகள்

பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடித்தாலும், கென்யாவில் வெள்ளம் ஏற்பட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி வருகிறது. இந்தியா தனது நட்பு நாடுகளுக்கு உதவுகிறது. உக்ரைன், ரஷ்யா போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், காசாவில் உணவு, இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கும் நாங்கள் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளோம்.

ஒற்றுமை

இந்தியா தனது நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உறுதிபூண்டுள்ளது. உலகளாவிய தெற்கின் நாடுகள் ஒன்றுக்கொன்று துணை நிற்க வேண்டும், பொதுவான இலக்கை அடைய ஒற்றுமையாக இருக்க வேண்டும். உலக நிர்வாகத்தை சமாளிக்க கடந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அமைப்புகளால் தற்போதைய நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள முடியவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Narayanan Muthu
ஆக 17, 2024 20:59

ஹரியானாவில் JJP கட்சி உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஓட்டமாமே அது பயங்கரவாதமா இல்லை பிரிவினை வாதமா


J.Isaac
ஆக 17, 2024 18:51

மதவாதம் ?


venugopal s
ஆக 17, 2024 16:41

இவை இரண்டோடு அப்படியே சேர்த்துக் கொள்ளலாம்!


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 17, 2024 16:22

இங்கே ஹிந்து பெயரில் கருத்து போடுபவர்களை புடிச்சு விசாரிச்சா கூட பல திடுக் சங்கதிகள் வெளிவரும் .....


Kasimani Baskaran
ஆக 17, 2024 16:01

ஓவராக ஆட்டம் போடும் மாநிலங்களை முதலில் அடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


துரைசதீஷ்
ஆக 17, 2024 15:51

இருந்தன. இருக்கின்றன. இருக்கும். இதை சொல்ல தனியா தலைவர்கள் வாணாம். நமக்கே தெரியும்.


Thirumal s S
ஆக 17, 2024 15:07

இவர் பேச்சுக்கள் என்ன ஆச்சு.


சிந்தனை
ஆக 17, 2024 13:57

அறிவாளிகளாலும் சிந்திக்க முடியாத தொலைநோக்குப் பார்வை மோடிக்கு.. மூடர்களுக்கு எங்கே புரியப்போகிறதோ... எல்லாம் இனி கத்துவார்கள்...


J.Isaac
ஆக 17, 2024 18:48

பெயர் போட கூட தைரியம் இல்லையே ?


Narayanan Muthu
ஆக 17, 2024 21:27

மூடர் கூடம் பெயர் போடும் வழக்கமில்லை.


பிரேம்ஜி
ஆக 17, 2024 13:21

பத்து வருஷமா!


Kumar Kumzi
ஆக 17, 2024 14:38

இன்னும் நல்லா கதரனும்


Swaminathan L
ஆக 17, 2024 13:13

கடந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அமைப்புகள் சுதந்திரமாகவும், வல்லரசுகளின் தலையீடு இல்லாமல் நேர்மையாக, எந்த நோக்கங்களுக்காக உருவானதோ அந்த நோக்கங்களைப் பின்பற்றிப் செயல்படுவதில்லை. பல அமைப்புகளுக்கு அதிகாரமும் இல்லை. சம்பிரதாயத்திற்காக பேட்டி, அறிக்கை தந்து விட்டு அமைதி காக்கவே அவைகள் செய்கின்றன. இந்த வீடோ பவர் என்கிற அதிகாரத்தை ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் எவ்வளவு அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்கின்றன என்பதைப் பார்க்கும்போது அந்த அமைப்புகளையே கலைத்து விடுவது தான் சரி என்று தோன்றுகிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை