உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடல் குதிரைகள் கடத்திய தமிழகத்தின் மூவர் கைது

கடல் குதிரைகள் கடத்திய தமிழகத்தின் மூவர் கைது

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த 6,626 உலர்ந்த கடல்குதிரைகள், மீட்ட வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தினர், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர்.பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு, 'உலர்ந்த கடல்குதிரைகள்' கடத்தப்படுவதாக, டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்துக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, ஆக., 3ம் தேதி விமான நிலையத்தில் சந்தேகிக்கும் வகையில் நடந்துகொண்ட மூன்று பயணியரின் உடைமைகளை, டி.ஆர்.ஐ., அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது மூன்று பைகளிலும் 6,626 உலர்ந்த கடல்குதிரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை, மும்பை வழியாக சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 30 வயது உள்ளவர்கள். 'உலர்ந்த கடல்குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டதில் இதுதான் அதிகம்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து, அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை