உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேட்புமனுக்கள் வாபஸ் இன்றே கடைசி நாள்

வேட்புமனுக்கள் வாபஸ் இன்றே கடைசி நாள்

பெங்களூரு: முதல் கட்ட தேர்தல் நடக்கும் 14 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்கு இன்றே கடைசி நாளாகும்.கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு, தலா 14 வீதம் ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.முதல் கட்டமாக, உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா - தனி, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் - தனி, பெங்களூரு ரூரல், பெங்., வடக்கு, பெங்., மத்திய, பெங்., தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார் - தனி ஆகிய 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.இதற்கான வேட்புமனு தாக்கல், மார்ச் 28ம் தேதி துவங்கி, ஏப்ரல் 4ம் தேதி நிறைவு பெற்றது. மொத்தம், 358 வேட்பாளர்கள், 492 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். பரிசீலனையின் போது, 74 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 300 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.மனுக்கள் திரும்ப பெறுவதற்கு இன்றே கடைசி நாளாகும். காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை மனுக்களை திரும்ப பெறலாம்.அதன்பின், இறுதி களத்தில் இருக்கின்ற மொத்த வேட்பாளர்களின் பட்டியலை, மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா வெளியிடுவார். தொடர்ந்து, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை