உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விடிய விடிய போக்குவரத்து நெரிசல்

விடிய விடிய போக்குவரத்து நெரிசல்

புதுடில்லி,:டில்லியில் பெய்த கனமழையால் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகளும் பயணியரும் அவதிப்பட்டனர்.டில்லியில் புதன்கிழமை மாலை பெய்த கனமழை குழப்பத்தை கட்டவிழ்த்து விட்டது. நகரின் பெரும்பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதன் எதிரொலியாக பெரும்பாலான பகுதிகள் முடிவில்லாத போக்குவரத்து நெரிசலால் திணறின. மக்கள் சிக்கித் தவித்தனர்.நேற்று காலை 7:00 மணி வரை, டில்லி காவல்துறைக்கு போக்குவரத்து நெரிசல் தொடர்பாக 2,945 அழைப்புகள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் தேங்கியதாக 127 அழைப்புகள், மரங்கள் விழுந்ததாக 50 அழைப்புகள் வந்துள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி