உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மரபணு மாற்று கடுகு விதை பரிசோதனை: இரு வேறு தீர்ப்பு

மரபணு மாற்று கடுகு விதை பரிசோதனை: இரு வேறு தீர்ப்பு

புதுடில்லி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி.எம்.எச்., - 11 வகை கடுகு விதை உற்பத்தி மற்றும் சோதனைக்கு அளிக்கப்பட்ட அனுமதி தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இருவேறு தீர்ப்பை அளித்துள்ளது.நம் நாட்டில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி.எம்.எச்., - 11 வகை கடுகு விதை உற்பத்தி மற்றும் அந்த விதைகளை களத்தில் பயிரிட்டு பரிசோதனை செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2022ல் ஒப்புதல் அளித்தது.அனுமதிஅமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு அளித்த அனுமதியை தொடர்ந்து இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.'மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயிரிட அனுமதி அளித்தால் சுற்றுச்சூழல் மாசுபடும்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சஞ்சய் கரோல் அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.நீதிபதி நாகரத்னா அளித்த தீர்ப்பில், 'அனுமதி தொடர்பாக, மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு நடத்திய கூட்டத்தில், சுகாதாரத்துறை உறுப்பினர்கள் பங்கேற்காதது விதிமீறல்' என, தெரிவித்தார்.பாதுகாப்புநீதிபதி சஞ்சய் கரோல் அளித்த தீர்ப்பில், மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழுவின் முடிவில் எந்த தவறும் இல்லை என்று கூறியதுடன், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளின் கள பரிசோதனைகளை கடுமையான பாதுகாப்புடன் நடத்தும்படி உத்தரவிட்டார்.இரு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்புகளை அளித்ததால், இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன் வைத்து, உரிய அமர்வு தீர்ப்பளிக்கும்படி அமர்வு உத்தரவிட்டது.அதே நேரம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் வகைகள் குறித்து தேசிய கொள்கை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுவதில், இரு நீதிபதிகளும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Subramanian Srinivasan
ஜூலை 24, 2024 18:09

இப்போது தேவையான கடுகு சாகுபடி இருக்கையில் மரபணு மாற்ற என்ன அவசியம் வந்தது?இயற்கையுடன் விளையாடுவதால்தால் பல புதிய நோய்கள் வருகிறது.


ஆரூர் ரங்
ஜூலை 24, 2024 12:02

ஐம்பதாண்டுகளாக எவ்வளவோ முயற்சித்தும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் மிகவும் பின்தங்கி விட்டோம்..எத்தனை காலம்தான் இறக்குமதியை நம்பியிருக்க வேண்டும்?


Swaminathan L
ஜூலை 24, 2024 09:28

அரசு அதிகாரிகள் விரும்பினால் இங்கே மரபணு மாற்றம் பெற்றது மட்டுமல்ல, மரபணு வடிவமைக்கப்பட்ட எதையும் களமிறக்கலாம், பயிராக்கலாம், சாப்பிட்டு வியாதி வந்து சாகலாம். நம் நாட்டுக்கே உரிய பயிர், காய்கறி, பழ வகைகளை ஒழித்து மரபணு மாற்றியவற்றை உண்ண வைத்து நம் மரபணுக்களையும் மாற்றாமல் விடாது உலக வர்த்தக மற்றும் அரசியல் மையங்கள்.


GMM
ஜூலை 24, 2024 07:43

சுகாதார உறுப்பினர் கலந்து கொள்ளாத விவரம் விசாரணை ஆரம்பத்தில் தெரிய வரும்? விசாரணை முடிவில் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டு விதி மீறல் என்று கூறுவதால், தீர்ப்பு மாறுபட்டு, தலைமை நீதிபதிக்கு செல்கிறது. வழக்கறிஞர்கள் மனு மற்றும் நீதிமன்ற தீர்ப்புக்கு CAG தணிக்கை அவசியம் தேவை. தற்போது மாமிச உணவு அதிகம் உண்பதால், மரபணு மாற்று கடுகு, கத்திரி போன்ற உணவு பொருட்கள் பயிரிட வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் தொகை கட்டுப்பாடு போதும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி