மரங்கள் கணக்கெடுப்பு மாநகராட்சி திட்டம்
பெங்களூரு: பெங்களூரில் அரசு அலுவலக வளாகங்கள், ரோட்டு ஓரங்கள், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், நிறுவனங்களில் வளர்க்கப்பட்ட மரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.பெங்களூரு மாநகராட்சியின் வனப்பிரிவு அதிகாரி சாமி, நேற்று வெளியிட்ட அறிக்கை:கர்நாடக ரிமோட் சென்னிங் அப்ளிகேஷன் சென்டர் ஒருங்கிணைப்பில், மரங்களின் கணக்கெடுப்பை நிர்வகிக்கும் தொழில் நுட்பத்தை, மாநகராட்சி மேம்படுத்தி உள்ளது. மரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த, ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மரங்களின் ஜாதி, இவற்றின் சுற்றளவு மற்றும் புகைப்படங்களை அந்த தொழில் நுட்பத்தில், ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்வர். இதுவரை பெங்களூரு முழுதும், பழைய 198 வார்டுகளில் மரங்கள் கணக்கெடுப்பு பணிகள் நடக்கின்றன. இதுவரை 1 லட்சத்து 43,100 மரங்கள் அடையாளம் காணப்பட்டன.வரும் நாட்களில் பொது மக்கள் தகவல் தெரிந்து கொள்வதற்காக, பெங்களூரு முழுதும் வளர்ந்துள்ள மரங்களின் ஜாதி மற்றும் அவற்றின் எண்ணிக்கை குறித்த விபரங்கள், சமூக வலைதளத்தில் வெளியிடப்படும்.பெங்களூரில் அரசு அலுவலக வளாகங்கள், ரோட்டு ஓரங்கள், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், நிறுவனங்களில் வளர்க்கப்பட்ட மரங்களின் கணக்கெடுப்பு நடத்தும் பணிகள், வெற்றிகரமாக முடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.