| ADDED : ஆக 15, 2024 12:59 PM
புதுடில்லி: டிரம்புடன் இணைந்து நடனமாடும் வீடியோவை, எலன் மஸ்க் சமூகவலைதளத்தில் பகிர்ந்து, 'எங்களை வெறுப்பவர்கள் ஏ.ஐ., என சொல்லக்கூடும்' என பதிவிட்டுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கவுள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) களம் காண்கிறார். கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி எலன் மஸ்க் அமெரிக்க டொனால்டு டிரம்ப்-ஐ நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் நேரலையில் நடைபெற்ற இந்த நேர்காணலை சுமார் 13 லட்சம் பேர் கேட்டனர் டான்ஸ் ஆடிய டிரம்ப், மஸ்க்
இந்நிலையில், டிரம்புடன் இணைந்து நடனமாடும் வீடியோவை, எலன் மஸ்க் சமூகவலைதளத்தில் பகிர்ந்து, 'எங்களை வெறுப்பவர்கள் ஏ.ஐ., என சொல்லக்கூடும்' என பதிவிட்டுள்ளார். கிளாசிக் மியூசிக் ஆல்பத்தின் 'ஸ்டேயிங் அலைவ்' என்ற பாடலுக்கு எலன் மஸ்கும், டிரம்பும் நடனம் ஆடும் காட்சியை அவர் வெளியிட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yw6ptjvg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பேஷன் ஷோ
சமீபத்தில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பேஷன் ஷோவில் பங்கேற்றால் எப்படியிருக்கும் என்ற எண்ணத்தில் 'ஏ.ஐ' தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை எலன் மஸ்க் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.