உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகா வருவதை தடுக்க முயற்சி மத்திய அமைச்சர் குமாரசாமி ஆதங்கம்

கர்நாடகா வருவதை தடுக்க முயற்சி மத்திய அமைச்சர் குமாரசாமி ஆதங்கம்

ஹாசன்: ''மத்திய அமைச்சரான பின், நான் டில்லியிலே இருப்பேன் என்று சிலர் நினைத்தனர். ஆனால் நான் அடிக்கடி, கர்நாடகாவுக்கு வருவது சிலருக்கு பிடிக்கவில்லை,'' என்று, கனரக தொழில் துறை மத்திய அமைச்சர் குமாரசாமி கூறினார்.மத்திய அமைச்சர் குமாரசாமி, ஹாசனில் நேற்று அளித்த பேட்டி:உத்தர கன்னடாவின் ஷிரூரில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நான் ஆய்வு செய்ததை, துணை முதல்வர் சிவகுமாரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. ராணுவத்தை அழைத்து வந்து ஆய்வு செய்யும்படி கூறுகிறார். காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் ஊழலை தடுப்பதற்கு, ராணுவத்தை அழைத்து வரும் காலம் வரும். சிவகுமாரால் பெங்களூரை, பிராண்ட் பெங்களூராக மாற்ற முடியுமா என்று தெரியவில்லை. குமாரசாமி 37 இடங்களில் வெற்றி பெற்று முதல்வரானதாகவும், தேவகவுடா 16 இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் ஆனதாகவும், காங்கிரஸ் தலைவர்கள் எங்களை விமர்சிக்கின்றனர்.நானும், தேவகவுடாவும் யாருடைய ஆட்சியையாவது கலைத்து உள்ளோமா. ஆட்சி அமைப்பதற்காக எங்களின் வீட்டு வாசலுக்கு வந்தவர்கள் காங்கிரஸ் தலைவர்கள்.அஹிந்தா சமூகங்களின் தலைவராக முதல்வர் சித்தராமையா தன்னை கூறி கொள்கிறார். ஆனால் எஸ்.சி., -- எஸ்.டி., சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்தியது ஏன்.நான் முதல்வராக இருந்தபோது, மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு, அரசு சார்பில் உடனடியாக வீடு கட்டிக் கொடுத்தோம். வீட்டு உபயோக பொருட்கள் வாங்க 50,000 ரூபாய் கொடுத்தோம்.நானும், எதிர்க்கட்சித் தலைவர் அசோக்கும் ஒற்றுமையாக இருப்பதை சிலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நான் மத்திய அமைச்சரான பின்னர், கர்நாடகா வரமாட்டேன் என்று சிலர் நினைத்து இருந்தனர். ஆனால் நான் மாநிலத்திற்கு அடிக்கடி வருவதை சிலரால் தாங்கி கொள்ள முடியவில்லை. என்னை இங்கு வரவிடாமல் தடுக்க பார்க்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை