உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சர் குமாரசாமி திருப்பதியில் சுவாமி தரிசனம்

மத்திய அமைச்சர் குமாரசாமி திருப்பதியில் சுவாமி தரிசனம்

மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி, திருப்பதி ஏழுமலையானை நேற்று தரிசனம் செய்தார்.லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் வென்ற குமாரசாமி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், கனரக தொழிற் துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.எம்.பி.,யாக டில்லிக்குச் சென்று, மத்திய அமைச்சராக பெங்களூரு திரும்பிய குமாரசாமிக்கு, நேற்று முன் தினம் ம.ஜ.த., - பா.ஜ., தொண்டர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். நேற்று முன் தினம் இரவு, குடும்பத்துடன் ஆந்திராவின் திருப்பதிக்கு சென்றார். நேற்று அதிகாலை ஏழுமலையானை தரிசனம் செய்தார்.அதன்பின் பெங்களூருக்கு திரும்பினர். நேற்று மாலை மாண்டியாவுக்கு சென்றார். அங்கு எம்.பி., அலுவலகத்தை திறந்துவைத்தார்.மத்திய அமைச்சரான பின், முதன்முறையாக குமாரசாமி மாண்டியாவுக்கு வருகை தந்ததால், அவருக்கு ம.ஜ.த., தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூன் 16, 2024 11:26

மக்களுக்கு நேர்மையாக பணிபுரிந்தால் அதுவே போதும். சாமி எல்லாம் கும்பிடவேண்டாம்.


thanjai NRS krish
ஜூன் 16, 2024 16:55

சாமி கும்பிட வேண்டாம் என்று சொல்லுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை அவரின் சொந்த விருப்பம்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி