உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசின் அகங்காரத்துக்கு மக்கள் பாடம் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விளாசல்

காங்கிரசின் அகங்காரத்துக்கு மக்கள் பாடம் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விளாசல்

பெங்களூரு: ''சட்டசபை தேர்தல் முடிந்து ஓராண்டுக்குள், காங்கிரசின் சித்தராமையா, சிவகுமாரின் அகங்காரத்துக்கு மக்கள் சரியான பாடம் புகட்டி உள்ளனர்,'' என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.பெங்களூரு அரண்மனை மைதானத்தில், புதிய பா.ஜ., - ம.ஜ.த., எம்.பி.,க்களுக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில் அவர் பேசியதாவது:வால்மீகி வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்தின் முறைகேட்டில், சித்தராமையா, சிவகுமார் ராஜினாமா செய்திருக்க வேண்டும். சட்டசபை தேர்தல் முடிந்து ஓராண்டுக்குள், காங்கிரசின் சித்தராமையா, சிவகுமாரின் அகங்காரத்துக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். இவர்களுக்கு இதயம் கனிந்த பாராட்டுகள்.

மூன்றாவது முறை

ஹிந்துகளுக்கு எதிரான, ஊழலில் மூழ்கிய காங்கிரஸ் அரசை துாக்கி எறிய நாம் உழைக்க வேண்டும். காங்கிரசின், அவப்பிரசாரத்துக்கு இடையிலும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நேருவுக்கு பின், மூன்றாவது முறை பிரதமரானவர் மோடி என்பதை மறக்கக் கூடாது.கேரளா, மேற்கு வங்கம், டில்லி உட்பட, பல்வேறு இடங்களில் பரஸ்பரம் அடித்துக் கொள்ளும், 'இண்டியா' கூட்டணி 230 தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஆனால் பா.ஜ., மட்டுமே 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுஉள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.மத்திய கனரக தொழில்கள் நலத்துறை அமைச்சர் குமாரசாமி பேசியதாவது:

மக்களின் ஆசி

இரண்டு கட்சிகளின் தொண்டர்களின் உழைப்பு, மாநில மக்களின் ஆசிக்கு எங்களின் நன்றி. நான் 2006ல் அரசியலுக்கு அறிமுகமானேன். நான் முதல்வர் பதவியில் அமர, எடியூரப்பாவே காரணம். பா.ஜ., மற்றும் ம.ஜ.த., கூட்டணியை, மக்கள் பறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டனர்.உலகம் முழுதும் பிரதமர் மோடி மீது, அபார மதிப்பு வைத்துள்ளனர். வாக்குறுதித் திட்டங்களுக்காக, பெட்ரோல், டீசல் விலையை காங்கிரஸ் கட்சியினர் உயர்த்தி உள்ளனர்.கடந்த 2008 முதல் இதுவரை பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடர்ந்திருந்தால், காங்கிரஸ் எப்போதோ காணாமல் போயிருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ