உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., இடைத்தேர்தல் : எத்தனை இடங்களில் சமாஜ்வாதி, காங்., போட்டி?

உ.பி., இடைத்தேர்தல் : எத்தனை இடங்களில் சமாஜ்வாதி, காங்., போட்டி?

லக்னோ: உ.பி., மாநிலத்தில் காலியாக உள்ள 10 தொகுதிகளில் ஏழு இடங்களில் அகிலேஷ் கட்சியும். மூன்று இடங்களில் காங்.,கும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும். இது குறித்த பேச்சுவார்த்தை விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது.உ.பி., மாநிலத்தில் எம்.எல்.ஏக்களாக இருந்தவர்களில் ஒன்பது பேர், நடந்து முடிந்த பொது தேர்தலில் எம்.பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் காரணமாக எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் சமஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் குற்றவியல் வழக்கில் நீதிமன்றம் விதித்த தண்டனை காரணமாக எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். இதன் காரணமாக மாநிலத்தில் தற்போது 10 இடங்கள் காலியாக உள்ளது. மாநிலத்தில் மில்கிபூர், கர்ஹால், மிராபூர், குந்தர்கி, காசியாபாத், கெய்ர், புல்பூர், கதேஹாரி, மஜ்வான் மற்றும் ஷிஷாமாவ் ஆகிய 10 தொகுதிகள் காலியாக உள்ளன. கடந்த 2022-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மிலிபூர், கர்ஹால், ஷிஷாமாவ், கதேஹரி மற்றும் குந்தர்கி ஆகிய இடங்களில் சமாஜ்வாதி வெற்றி பெற்றது. பாஜக மூன்று இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரிய லோக்தளம் (ஆர்எல்டி) மற்றும் நிஷாத் கட்சி (என்பி) தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.இதில் ஏற்கனவே சமஜ்வாதி கட்சி வெற்றி பெற்ற தொகுதியில் மீண்டும் அக்கட்சியே போட்டியிடுவதுடன் கூடுதலாக இரண்டுதொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. மேலும் காஜியாபாத், கைர் மற்றும் புல்பூர் ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட கூடும் என கூறப்படுகிறது.அதே நேரத்தில் லோக்சபா தொகுதியில் பெற்ற தோல்வியை அடுத்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மொத்தமுள்ள 10 இடங்களில் எட்டு தொகுதிகளில் மூன்று அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து உள்ளார். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முகாமிட்டு உள்ளூர் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஒருங்கிணைந்து வெற்றியை உறுதி செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தாமரை மலர்கிறது
ஜூலை 20, 2024 01:49

இடைத்தேர்தலில் யோகி ஜெயிப்பார். இல்லையெனில் அவரது பதவிக்கு ஆபத்தாகிவிடும். அதனால் யோகி கண்டிப்பாக கடுமையாக போராடி ஜெயிப்பார்.


S. Gopalakrishnan
ஜூலை 20, 2024 00:02

மூன்று / ஏழு என்று முடிவு செய்யப்பட்டது. அதன் பின் என்ன பேச்சு வார்த்தை ?


Duruvesan
ஜூலை 19, 2024 21:03

யோகி ஜெயிச்சா துனூறு குங்குமம் குடுப்பானுங்க, ராவுள் ஜெயிச்சா 1 லக்சம் கிடைக்கும். ஆக இண்டி கூட்டணி வெற்றி உறுதி


பேசும் தமிழன்
ஜூலை 20, 2024 17:20

எங்கே இருந்து கொடுபார்..... இத்தாலியில் இருந்தா ???... அங்கே இருப்பதை கொடுத்தாலும் கொடுக்கலாம்.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை