உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடலோர மாவட்டங்களில் 14 வரை மஞ்சள் அலெர்ட்

கடலோர மாவட்டங்களில் 14 வரை மஞ்சள் அலெர்ட்

பெங்களூரு : ''பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் வரும் 14ம் தேதி வரை கன மழை பெய்யும். எனவே, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது,'' என வானிலை ஆய்வு மைய இயக்குனர் சி.எஸ்.பாட்டீல் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் 14ம் தேதி வரை கன மழை பெய்யும். மணிக்கு 30 முதல் 45 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாநிலத்தின் வடக்கு உள்பகுதியில் பெலகாவியில் நாளை (இன்று) முதல் நான்கு நாட்களுக்கும்; கலபுரகியில் 12, 14ம் தேதியும்; தார்வாடில் நாளை (இன்றும்); பீதரில் நாளையும்; ராய்ச்சூர், விஜயபுரா, யாத்கிரில் 14ம் தேதியும்; மலை பிரதேசங்களான சிக்கமகளூரு, ஹாசன், ஷிவமொகா, குடகு மாவட்டங்களுக்கு நாளை முதல் மூன்று நாட்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.தெற்கு உள் பகுதியான பல்லாரி, பெங்களூரு ரூரல், பெங்களூரு நகரம், சாம்ராஜ்நகர், சிக்கபல்லாபூர், சித்ரதுர்கா, தாவணகெரே, கோலார், மாண்டியா, மைசூரு, ராம்நகர், துமகூரு, விஜயநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.அடுத்த 48 மணி நேரத்துக்கு பெங்களூரு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 30 டிகிரி செல்ஷியசும், குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்ஷியசும் வெப்ப நிலை பதிவாகும்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை