உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்டோ மீது வேன் மோதல் பி.யு., கல்லுாரி மாணவி பலி

ஆட்டோ மீது வேன் மோதல் பி.யு., கல்லுாரி மாணவி பலி

ஷிவமொகா: ஷிவமொகாவில் ஆட்டோ மீது வேன் மோதியதில், பி.யு.சி., கல்லுாரி மாணவி உயிரிழந்தார்.சித்ரதுர்கா மாவட்டம், அஜ்ஜபூரை சேர்ந்தவர் ஞானவி, 17. ஷிவமொகாவில் தனியார் பி.யு.சி., கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஷிவமொகாவில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க, மாணவியின் தாய், பாட்டி ஆகியோர் வந்தனர். நேற்று உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், ஞானவியை விடுதியில் விட ஆட்டோவில் தாய், பாட்டியுடன் சென்று கொண்டிருந்தனர்.தவரே சட்னள்ளி அருகே செல்லும் போது, எதிரே வந்த சரக்கு வேன், ஆட்டோ மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. ஆட்டோ கவிழ்ந்ததில், ஆட்டோவின் இடதுபுறம் அமர்ந்திருந்த மாணவி ஞானவி, சாலையில் விழுந்ததில், வயிற்றின் கீழ் பகுதியில் பலத்த அடி விழுந்தது.அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஞானவி உயிரிழந்தார். அவரது தாய், பாட்டி, ஆட்டோ ஓட்டுனர் மக்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தகவல் அறிந்த ஷிவமொகா கிழக்கு போக்குவரத்து போலீசார், செய்லுார் அருகே சரக்கு வேனை மடக்கி பிடித்தனர். ஓட்டுனரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி