| ADDED : ஜூன் 12, 2024 11:42 PM
தங்கவயல்: ராபர்ட்சன் பேட்டையில், அனைத்து குறுக்கு சாலைகளிலும் வாகனங்களை நிறுத்துவதால்,போக்குவரத்து நெரிசலும், நடந்து செல்பவர்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.தங்கவயலில் வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை. குறைந்தது 60 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் தங்கவயலில் உள்ளன. இது மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் இருந்து வந்து செல்கிற வாகனங்கள் வேறு. இவற்றை நிறுத்துவதற்கு ராபர்ட்சன் பேட்டையில் இடமே இல்லை என பலர் நகராட்சி மீது குறை கூறி வந்தனர். இதனால் ராபர்ட்சன் பேட்டை புல் மார்க்கெட் பகுதியில் விசாலமான இடத்தில் இலவசமாக வாகனங்கள் நிறுத்த இடம் வசதி ஏற்படுத்தினர்.பல இடங்களில் வாகன நிறுத்துமிடம் குறித்து அறிவிப்பு பலகையும் வைத்தனர். ஆயினும், வாகனங்களை இயக்குபவர்கள்ஒரு பொருட்டாக கருதாமல் அனைத்து குறுக்கு சாலைகளின் நடைபாதைகளில் நிறுத்துகின்றனர். ஒத்துழைப்பு தேவை
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஜெயின் வார்டு கவுன்சில் ரமேஷ் ஜெயின் கூறியதாவது,ராபர்ட்சன் பேட்டை பஸ் நிலையம், மார்க்கெட், 4வது பிளாக், தொட்டி, சஞ்சய் காந்தி நகரில் ஒரு பகுதிக்கு உட்பட்டது ஜெயின் வார்டு. இங்கு சாலைகளில், நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்கபல் மார்க்கெட் பகுதியில் இலவச பார்க்கிங் வசதி செய்யப்பட்டது.வாகனங்களும் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை. விழிப்புணர்வு இல்லை. நகராட்சி தரப்பில் வாகன வசதிக்கு வேறென்ன செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.12.6.2024 / ஜெயசீலன்படம்: ரமேஷ் ஜெயின்13_DMR_0008, 13_DMR_0009, 13_DMR_0010தங்கவயலில் இலவசமாக வாகனங்கள் நிறுத்த புல் மார்க்கெட் பகுதியில் விசாலமான இடம் ஒதுக்கி நான்கு மாதங்கள் ஆகிறது. ஆனால் இங்கு வாகனங்கள் நிறுத்துவதில்லை. (அடுத்த படம்) கீதா சாலையில் சாலையில் நிறுத்தப் படும் வாகனங்கள். (கடைசி படம்) மஹாவீர் ஜெயின் கல்லூரி அருகில் நிறுத்தி உள்ள வாகனங்கள். இடம்: ராபர்ட்சன் பேட்டை