உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டு போட அனுமதி கோரிய வினய் குல்கர்னி மனு தள்ளுபடி

ஓட்டு போட அனுமதி கோரிய வினய் குல்கர்னி மனு தள்ளுபடி

பெங்களூரு,: முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னி, ஓட்டு போடுவதற்காக தார்வாட் செல்ல அனுமதி கோரிய மனுவை, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பா.ஜ., தலைவரும், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராகவும் பதவி வகித்தவர் யோகேஷ் கவுடா. இவர் 2016 ஜூன் 15ல், மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.யோகேஷ் கவுடா கொலை வழக்கு, 2019ல் சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நடத்திய சி.பி.ஐ., கொலையில் காங்கிரஸ் தலைவர் வினய் குல்கர்னிக்கு தொடர்பிருப்பதை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்தனர். மாதக்கணக்கில் சிறையில் இருந்த இவருக்கு, கீழ்நிலை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஜாமின் அளிக்க மறுத்தன.அதன்பின் உச்ச நீதிமன்றத்தை நாடி, ஜாமின் பெற்றார். 'செல்வாக்கு மிக்கவர் என்பதால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே தார்வாட் செல்ல கூடாது' என, நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. அன்று முதல் இதுவரை, அவரால் தார்வாட் செல்ல முடியவில்லை.சட்டசபை தேர்தலில், தார்வாட் தொகுதியில் வினய் குல்கர்னி போட்டியிட்ட போதும், பிரசாரத்துக்கு செல்ல முடியவில்லை. சமூக வலைதளங்கள் வழியாக, பிரசாரம் செய்தார். கணவருக்காக மனைவி, தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்தார். வெற்றி பெற்றும் கூட, வினய் குல்கர்னியால், அமைச்சராக முடியவில்லை. இவர் மீதுள்ள கொலை வழக்கே, அமைச்சர் பதவி கிடைக்க முட்டுக்கட்டையாக இருந்தது.தார்வாட் லோக்சபா தொகுதிக்கு, இன்று ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. ஓட்டு போட செல்ல வேண்டியுள்ளதால், தார்வாட் செல்ல அனுமதி கோரி, பெங்களூரின் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வினய் குல்கர்னி, மனு தாக்கல் செய்திருந்தார்.மனு மீது நேற்று விசாரணை நடத்திய நீதிமன்றம், 'தார்வாட் செல்ல அனுமதிக்க முடியாது' என, கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் அவர் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை