உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமருக்கு ஓட்டு போடுங்கள்! கர்நாடக முதல்வர் சித்துவின் நிபந்தனை

பிரதமருக்கு ஓட்டு போடுங்கள்! கர்நாடக முதல்வர் சித்துவின் நிபந்தனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உத்தர கன்னடா: ''பத்து ஆண்டுகளில் தான் சொன்னதை செய்திருந்தால் பிரதமர் மோடிக்கு ஓட்டு போடுங்கள். இல்லையெனில் புறக்கணியுங்கள்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.உத்தர கன்னடா மாவட்டம், முண்டகோடாவில் நேற்று காங்கிரஸ் பிரசார கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது: பா.ஜ.,வினர் மதம், வெறுப்பு என மக்கள் உணர்வுடன் அரசியல் செய்கின்றனர். மோடி பிரதமரானால் 100 நாட்களில் கருப்புப் பணத்தை கொண்டு வந்து, நாட்டின் அனைத்து மக்களின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்வதாக தெரிவித்தார். இதுவரை 1பைசா கூட டிபாசிட் செய்யவில்லை.

பக்கோடா

பத்து ஆண்டுகளில், 20 கோடி வேண்டாம், 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவில்லை. வேலை கேட்டவர்களுக்கு 'பக்கோடா' விற்பனை செய்யுங்கள் என கூறுகிறார். பத்து ஆண்டுகளில் பிரதமர் மோடி, அவர் சொன்னதை செய்திருந்தால் அவருக்கு ஓட்டு போடுங்கள்; இல்லையெனில் புறக்கணியுங்கள்.விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் ஏற்படுத்தி தரப்படும் என கூறி, அவர்களையும் ஏமாற்றி உள்ளார். காய்கறிகள் விலையை குறைப்பதாக கூறினர். ஆனால் இதுவரை குறைக்கவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது.சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் மதிப்பளிக்கும் காங்கிரசுக்கு ஆதரவு தாருங்கள். இம்முறை மோடியை நம்ப வேண்டாம். 'பொய்' தான் அவர்களுக்கு கடவுள். இவ்வாறு அவர் பேசினார்.

அனைவருக்கும் பலம்

துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அனைத்து தரப்பு மக்களுக்கும் பலம் கிடைத்ததற்கு சமம். கர்நாடகாவில் ஒரு அணையை கூட பா.ஜ., கட்டவில்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் அணைகள், பவர் ஹவுஸ், வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன.கர்நாடகாவுக்கு கிடைக்க வேண்டிய வரியை வழங்காதது குறித்து, லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் பலமுறை கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால், இங்கிருந்து தேர்வான 25 பா.ஜ., - எம்.பி.,க்கள் ஒருவராவது இதுபற்றி கேட்டனரா? இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
மே 04, 2024 15:13

பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு சென்ற MP தேர்தலில் தீவீரபிரச்சாரம் செய்ததது இதே சித்தராமையாதான்.


Nagarajan D
மே 04, 2024 10:54

சித்தம் ஆகிய சித்து உன் முதலாளி எங்கே போட்டியிடுவது என்றுகூட தெரியாமல் தெணறிக் கொண்டுருக்கிறான் உன் கூற்றை அவன் கூட சிரித்துவிட்டு கடந்து செல்வான் நீ சொல்வதை போலவே மோடிக்கு ஒட்டு போடாமல் இருந்துவிடுகிறோம் உங்க கொள்ளை கூட்டத்தில் யாருக்கு பிரதமராகும் வாய்ப்பு ள்ளது என்று சொல்லு? மம்தாவா? ஸ்டாலின்? அஃகிலேஷ் யாதவ்? சரத் பவார் பினராயி அல்லது சிறைப்பறவை கேஜ்ரிவாலா? யார் பிரதமர் என்று நீ தைரியமாக சொல்லு ஏற்கலாம்


R SRINIVASAN
மே 04, 2024 08:35

சித்தராமையா பதவிக்காக தேவ கவுடா கட்சியிலிருந்து காங்கிரஸ் இல் சேர்ந்ந்தார்


Raghuraman K
மே 04, 2024 07:51

They say if one speaks falsehood they will not get foodEither CM or DyCM are speaking truth or only doing show of enjoying their foodAversion to food is a major disease


Minimole P C
மே 04, 2024 07:32

These people copy their propaganda from DMK who always lie about central Govt particularly on GST False accusation wont help long time


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி