உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்ன கேள்வி இது! கிளி ஜோசியம் பாக்குற மாதிரி: சீமான் "கலகல"

என்ன கேள்வி இது! கிளி ஜோசியம் பாக்குற மாதிரி: சீமான் "கலகல"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நிருபர்கள் கேள்விக்கு, 'எங்களுக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது. என்ன கேள்வி இது! கிளி ஜோசியம் பாக்குற மாதிரி இருக்கிறது' என அக்கட்சி தலைவர் சீமான் பதில் அளித்தார். மேலும் சீமான் கூறியதாவது: போட்டி போடுவது எல்லா இடத்திலும் வெற்றி பெறுவதற்கு தான். தனிப்பட்ட முதலாளியின் வளர்ச்சி எப்படி நாட்டின் வளர்ச்சியாகும்?. சாலைக்கு பெயர் தேசிய நெடுஞ்சாலை. குறுக்கே கட்டை போட்டு வசூல் செய்பவர்கள் தனியார் முதலாளி. சாலையை விற்றுவிட்டார்கள். இப்பொழுது நாட்டை விற்று கொண்டு இருக்கிறார்கள். ஜாபர் சாதிக் என்ன செய்தார் என்று தெரியாது. அமீர் சொல்லும், நியாயத்தை உணர வேண்டும். ஒரு முதலாளி படம் எடுக்க வரும் போது, உங்களுக்கு பணம் எப்படி வந்தது என்று கேட்டு விட்டு, யாரும் படம் எடுப்பது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

J.V. Iyer
மே 07, 2024 04:03

சிரிப்பு நடிகர்களைப்போல அரசியலிலும் நிறைய சிரிப்பு அல்லது சிரிப்பாய் சிரிக்கும் அரசியல்வாதிகள் உண்டு இதில் பாப்பு தத்தி ராகுல், கமலஹாஸ்யன் இவர்களுடன் லேட்டஸ்ட் சீமான் இவர்கள் சொல்வதை சீரியசாக எடுத்துக்கொள்ளக்கூடாது


rama adhavan
மே 06, 2024 23:38

இவரது கட்சியில் இவரது தும்பிகள் வளரவில்லேயே, இவர்தான் வளர்ந்துள்ளார் எனவே இது கட்சி வளர்ச்சி என கருதக்கூடாது


Godfather_Senior
மே 06, 2024 20:33

என்ன செய்வது? எல்லா கிரிமினல் கிட்டேயிருந்தும் கை நீட்டி பணம் வாங்கிட்டா, அவங்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டியுள்ளதே அதான் அமீருக்கும் ஜாப்பருக்கும் சப்போர்ட் கொடுக்கிறாராக்கும்


Premanathan Sambandam
மே 06, 2024 20:32

இவர்கள பற்றி நியூஸ் போட்டு பெரியாளாக்கி விடுவது பத்திரிக்கை வியாபாரிகள்தான்


A1Suresh
மே 06, 2024 19:44

இலவு காத்த கிளி


Srinivasan Krishnamoorthi
மே 06, 2024 18:53

எவ்வளவு நாள் ஆனாலும் அவ்வப்போது பைத்தியம் மாதிரி பேசுவதை இவரால் தவிர்க்க முடியவில்லை போலும் கமலுக்கு இவர் தேவலாம் என கொள்வோம் வேற வழி இல்லை எல்லா தொகுதியிலும் கூட்டணி அமைக்காமல் போட்டியிடும் இவருக்கு தெளிவான கொள்கை இருப்பதாக மக்கள் உணர்ந்தாலே போதும் கண்டிப்பாக வெல்ல முடியும் இவர் முதலில் தெளிவாக பேச தொடங்கினாலே பெரிய வளர்ச்சி காண முடியும் ஆம் ஆத்மி பார்த்து ஆரம்பித்த கட்சி தேமுதிக செய்த தவறு கூட்டணி அமைத்தது அதை இவர் செய்ய வில்லை என்பதற்கு பாராட்டுகள்


vijay
மே 06, 2024 18:42

இந்தியாவுல மொத்த மக்கள் தொகையில் - சதவீத மக்கள் மட்டுமே வருமானவரி கட்டுறாங்க இது நாட்டின் வரு வருவாயில் சதவீதம் மற்றவை GST , பெரிய கம்பெனிகள் கட்டும் வரிகள் மூலம் வருகிறது ஆனால் அனைத்து மக்களுக்கும் தேவையான வசதிகள் செய்யவேண்டும், நாட்டின் உள்கட்டமைப்பை பலப்படுத்தவேண்டும், தேசிய நெடுஞ்சாலைகள் முதற்கொண்டு பாலங்கள் வரை கட்ட பல ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டவேண்டும், மாதாமாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கணும் ரயில்வே சேவைகளை மேம்படுத்தவேண்டும், அடிப்படை வசதிகளை நாட்டு மக்களுக்கு செய்து கொடுக்கவேண்டும் நாட்டின் பாதுகாப்புக்கு செலவு செய்யவேண்டும், மருத்துவம், அறிவியல் முதற்கொண்டு பல துறைகளுக்கு செலவு செய்தே ஆகவேண்டும் தரமான சாலைகளை டெண்டர் மூலமாக இணைந்து கட்டிமுடிச்சவுடன், அதானால் செலவுகளை அதை பயன்படுத்தும் கார் வைத்துள்ள மக்களும், முதலாளிகளும், லாரிகள், பேருந்துகளும் கட்டுவார்கள், சில ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக அரசின் வசம் வந்துவிடும் எல்லாவற்றிலும் அரசாங்கமே அனைத்தும் முதலீடு செய்யவேண்டும் என்றால், முதலில் சம்பாதிக்கும் மக்கள் அனைவருக்கும் வரிகள் போடவேண்டும் டோல் கட்டுகளில் டூ வீலர்களுக்கு கட்டணம் கிடையாது இவரு சொல்வதுபோல எதற்கும் வரி இல்லாமல் செய்துவிடலாம், விவசாயிகளை, ஆடு மாடு மேய்ப்பவர்களை அரசாங்க ஊழியர்களாக ஆகிவிடலாம், எல்லோருக்கும் எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்துவிடலாம், நாட்டையும் திவாலாகி விடலாம் நம்மைவிட அமெரிக்காவில் அதிகம் பேர் வரி கட்டுகின்றனர்


GoK
மே 06, 2024 18:30

தப்பான கேள்வி எந்தெந்த தொகுதிலே டெபாசிட் கிடைக்கும்னு கேட்டிருக்கணும்


Godfather_Senior
மே 06, 2024 20:11

ஆஹா , சரியான கருத்து


ராஜவேல்,வத்தலக்குண்டு
மே 06, 2024 17:55

AK 74 துப்பாக்கியால் அரிசிக் கப்பலை சுட்டு ஆமைக்கறி சாப்பிடுவது எப்படி என்று கேட்டால் அப்படியே கதை கட்டுரை எல்லாம் அளந்து விடுவாப்ள அதவிட்டு அவர்கிட்ட போயி எத்தனை தொகுதிகள்ல ஜெயிப்பீங்க அப்படி ஜெயிச்சா அது எந்தெந்த தொகுதின்னு கேட்டா அவரால் எப்படி பதில் சொல்ல முடியும்?


சுலைமான்
மே 06, 2024 17:34

அதானே..... ஜாபர் சாதிக் என்ன பண்ணினான்னு அமீருக்கும் தெரியாது.... போலீஸ் புடிச்சி ஜெயில்ல போட்ட பிறகும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை