உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாப்பிட்டதை வெளியில் காட்ட வேண்டிய அவசியம் என்ன? தேஜஸ்விக்கு ராஜ்நாத் கேள்வி

சாப்பிட்டதை வெளியில் காட்ட வேண்டிய அவசியம் என்ன? தேஜஸ்விக்கு ராஜ்நாத் கேள்வி

பாட்னா: ''மீன், பன்றி, புறா, யானை, குதிரை என, எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். ஆனால், அதை வெளியில் காட்ட வேண்டிய அவசியம் என்ன?'' என, தேஜஸ்வி யாதவுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.நாடு முழுதும் வரும் 19ல் துவங்கி, ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது; ஜூன் 4ல் முடிவுகள் வெளியாகின்றன. நாடு முழுதும் தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது.பீஹார் உள்ளிட்ட வட மாநிலங்களில் சமீபத்தில், நவராத்திரி கொண்டாடப்பட்டது. அந்த சமயத்தில் பீஹார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், மீன் சாப்பிடுவது போன்ற வீடியோவை வெளியிட்டார். நவராத்திரி பண்டிகையின் போது மீன் சாப்பிட்டதற்கு, அவருக்கு பா.ஜ., உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். 'இந்த வீடியோ நவராத்திரிக்கு முன் எடுக்கப்பட்டது' என, தேஜஸ்வி யாதவ் விளக்கம் அளித்தார்.இந்நிலையில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பீஹாரில், ஜமுய் என்ற இடத்தில் நடந்த பா.ஜ., நிகழ்ச்சி ஒன்றில், அக்கட்சி மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் நேற்று பேசியதாவது:நவராத்திரியின் போது, தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிட்டது ஏன்? இதன் வாயிலாக, அவர் என்ன சொல்ல விரும்புகிறார்? மீன், பன்றி, புறா, யானை, குதிரை என, எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். இதை வெளியில் காட்ட வேண்டிய அவசியம் என்ன? ஓட்டு வங்கி அரசியலுக்காக மட்டுமே இது போன்ற செயல்களை செய்கின்றனர். இதனால், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஓட்டளிப்பர் என, அவர்கள் தப்புக் கணக்கு போடுகின்றனர். லாலு பிரசாத் யாதவ் அவர்களே, இது போன்ற நபர்களை தயவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை