உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எமர்ஜென்சி விதித்து அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்தது யார்?: மத்திய அமைச்சர் கேள்வி

எமர்ஜென்சி விதித்து அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்தது யார்?: மத்திய அமைச்சர் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: எமர்ஜென்சி விதித்து அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்தது யார்? என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பி உள்ளார்.கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சி 12 தொகுதிகளில் வென்று முதல் இடத்தை பிடித்தது. பா.ஜ., 8 இடங்களில் வென்று 2வது இடத்தை பிடித்தது. இம்முறை அதிக இடங்களில் வெற்றி பெற பா.ஜ., தீவிர முயற்சி எடுத்துள்ளது. இந்நிலையில், பா.ஜ., சார்பில் சம்பல்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் பிரசாரத்தின் போது காங்கிரஸ் மற்றும் ராகுலை கடுமையாக சாடினார். அப்போது அவர் பேசியதாவது: ராகுல் பெரிய பொய்யர். எமர்ஜென்சி விதித்து அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்தது யார்?. அதை அவரது குடும்பத்தினர் செய்தார்கள். நாட்டில் பா.ஜ., ஆட்சி செய்யும் வரை, எங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் தான் உயர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

முருகன்
மே 15, 2024 19:56

பழைய கதையை பேசி மக்களை ஏன் ஏமாற்ற வேண்டும் உங்களுக்கு தான் காங்கிரஸை பிடிக்காதே


Nagarajan
மே 15, 2024 19:56

காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தின் நலனை தவிர்த்து நாட்டு முன்னேற்றத்தில் பெரிய அளவில் நாட்டம் இல்லை எப்போதெல்லாம் தோற்போம் என்று தெரிகிறதோ அப்போதெல்லாம் தில்லாலங்கடி வேலை செய்வர் அதில் ஒன்று தான் எமெர்ஜென்சி அதேபோல் ஷபானு கேசில் சுப்ரீம் கோர்ட் ஆளாவன்ஸ் கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பை பார்லிமென்டில் எதிராக சட்டம் கொண்டு வந்தவர் ராஜீவ் காந்தி


Syed ghouse basha
மே 15, 2024 17:42

எமர்ஜென்சிலே கூட ஜனநாயகத்திற்கு தான் சற்று பின்னடைவு ஆனால் இப்போ வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பேராபத்து மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ முடியவில்லை


Dharmavaan
மே 16, 2024 01:24

வந்தேறி ரோஹிங்கா ,வங்க தேச கள்ளக்குடியேறிகளுக்கு மட்டுமே பின்னடைவு


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 16, 2024 13:47

எமெர்ஜென்சியில் அதிகமாக பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள் மறந்து விடாதீர்கள் டெல்லியில் முஸ்லிம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததை காங்கிரஸ் முஸ்லிம்களை எப்பொழுதும் பகடை காய்களாக தான் உபயோகப்படுத்தப்படுகிறது


தாமு
மே 15, 2024 17:02

அப்போவெல்லாம் இண்டர்நெட், வாட்சப்பெல்லாம்.கிடையாது. அதனால் எமர்ஜென்சி. இப்போ இண்டர்நெட்டை முடக்கி அங்கங்கே மினி எமர்ஜென்சி . அது சரி, அரசியல் சாசனத்தில் இருந்ததால் தானே எமர்ஜென்சி கொண்டார முடிஞ்சுது?


ஆரூர் ரங்
மே 15, 2024 17:28

1. வெளிநாட்டுப் போர் போன்ற ஆபத்தான காலங்களுக்காக அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட அவசரநிலையை இந்திரா தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளும் சுயநலத்திற்காக துஷ்பிரயோகம் செய்தார். அதற்காக அவரே பின்னர் மன்னிப்பும் கேட்டது வரலாறு. ஆனாலும் இன்றுவரை அவரது கட்சி திருந்தவில்லை.2. ஊரடங்கை அமல்படுத்துவதற்கு பதில் வதந்திகள் பரவாமல் தடுக்க இணையத்தடை அவசியமே.


ஆரூர் ரங்
மே 15, 2024 16:54

திலகர், பாரதி, நேதாஜி, ராஜாஜி, பட்டேல் போன்றோர் போராடிப் பெற்றுத்தந்த சுதந்திரத்தை ஒரே இரவில் முடக்கி அடிப்படை உரிமைகளைப் பறித்து ஊடக சுதந்திரத்தை சிறையிலடைத்து நாசமாக்கியது


கனோஜ் ஆங்ரே
மே 15, 2024 17:16

விடுதலை போரில் தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரண்டு வகை போராட்டக்காரர்கள் இருந்தனர் நீங்க சொன்ன எல்லாருமே தீவிரவாதிகள் குரூப்ஸ் உங்களுக்கு எப்பவுமே மிதவாதிகளை பிடிக்காது


Rajinikanth
மே 15, 2024 16:28

குஜராத்தில் மத கலவரத்தை தூண்டி, மக்களை காப்பாற்றாமல் மனித உயிர்களை காவு வாங்கியது யார்?


ஆரூர் ரங்
மே 15, 2024 17:22

வேற யாரு? கோத்ரா ரயிலுக்கு தீவைத்து பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட அறுபது அப்பாவிகளின் உயிரைப் பறித்து கலவரத்திற்கு வித்திட்ட கும்பல்தான்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை