உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியின் கஜகஸ்தான் பயணம் ரத்து ஏன்?

மோடியின் கஜகஸ்தான் பயணம் ரத்து ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடியின் கஜகஸ்தான் பயண திட்டம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரமதராக மூன்றாம் முறையாக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி சென்று ஜி7 மாநாட்டில் பங்கேற்றார்.இந்நிலையில் வரும் ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளி்ல எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தானா நகரில் நடக்கிறது.இதில் பங்கேற்க மோடி கஜகஸ்தான் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும்,மோடிக்கு பதிலாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர் கஜகஸ்தான் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ரத்து ஏன் ?பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதில் பங்கேற்று விவாதம் செய்ய உள்ளதால் இம்முடிவு என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Neethan K
ஜூன் 30, 2024 07:16

சுதந்திர இந்தியாவின் பாரத பிரதமர்களிலேயே தேசத்தின் முன்னேற்றத்திற்காக மிக அதிகம் செயல்பட்டவரும், மிக அதிகம் விமர்சிக்கப்படுபவரும் திரு நரேந்திர மோதி தான். பழுத்த மரம் கல்லடி படும் என்பது இயற்கை நியதி.


K.n. Dhasarathan
ஜூன் 29, 2024 21:12

என்னது பிரதமர் பாராளுமன்றம் வருகையா? கேள்விகளுக்கு பதில் சொல்லப்போகிறாரா ? சும்மா காமடி பண்ணாதீங்க நாங்கயெல்லாம் திருந்தவே மாட்டோம், மைனாரிட்டி அரசு என்றாலும் கெத்து காட்டிக்கொண்டே நாளை கடத்துவோம்.


ராணுவவீரன்
ஜூன் 29, 2024 09:49

ஒண்ணு ராணுவதளவாடம் வாங்கணும். இல்லே விக்கணும். அது இல்லாத நாடுகளுக்குப் போவது வேஸ்ட்.


s sambath kumar
ஜூன் 29, 2024 16:17

ராணுவ தளவாடம் வாங்குறதுநாளதான் நீ பாதுகாப்போடு இருக்க. ஞாபகம் வச்சுக்க. அவ்வளவு எதிரிகள் நம்மைச்சுற்றி.


The Rider
ஜூன் 29, 2024 07:35

ஜெய்சங்கர், பாரதத்தின் வரப்பிரசாதம் ??


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ