உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏன் ஜாமின் கேட்கவில்லை? கெஜ்ரிவாலுக்கு கோர்ட் கேள்வி!

ஏன் ஜாமின் கேட்கவில்லை? கெஜ்ரிவாலுக்கு கோர்ட் கேள்வி!

புதுடில்லி, 'மதுபான ஊழல் வழக்கில் ஏன் ஜாமின் கேட்கவில்லை' என்று, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eg6ogh6y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டது மற்றும் அதன் காவலில் விசாரிக்க அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, ஏன் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை' என, அமர்வு கேள்வி எழுப்பியது.இதற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தன் வாதத்தில் கூறியுள்ளதாவது:ஜாமின் கேட்டு நாங்கள் மனு தாக்கல் செய்யவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமான காரணம், இது சட்டத்துக்கு எதிரான கைது நடவடிக்கை என்பதுதான். அதனால்தான், அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம்.இவ்வாறு அவர் வாதிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை