உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று ஜாமின் கிடைக்குமா?

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று ஜாமின் கிடைக்குமா?

பகர்கஞ்ச்:கலால் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.கலால் கொள்கை விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த மார்ச் மாதம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதே வழக்கில் அவரை ஜூன் 26ம் தேதி சி.பி.ஐ.,யும் கைது செய்தது.சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்தும், ஜாமின் கோரியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியுள்ளது.இந்த மனுக்கள் மீது நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.அவருக்கு ஜாமின் கிடைக்குமென ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ராகவ் சதா நம்பிக்கை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி