உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை முன்னேற்றுவார்கள்: அனுராக் தாக்கூர் பேட்டி

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை முன்னேற்றுவார்கள்: அனுராக் தாக்கூர் பேட்டி

புதுடில்லி: 'பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை முன்னேற்றுவார்கள்' என பா.ஜ., எம்.பி அனுராக் தாக்கூர் கூறினார்.டில்லியில் நிருபர்கள் சந்திப்பில் அனுராக் தாக்கூர் கூறியதாவது: மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் சிறப்பாக பணி செய்து, அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை முன்னேற்றுவார்கள்.

மக்கள் பணி

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க, பல வெளிநாட்டு தலைவர்கள் இன்று டில்லி வந்துள்ளனர். நான் முன்பு எம்.பி.யாக இருந்தேன். இன்றும் எம்.பி.யாக இருக்கிறேன். நான் பல நாட்களாக பா.ஜ., கட்சியின் தொண்டராக இருந்து வருகிறேன். கட்சி தொண்டராக இருந்து தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Nagercoil Suresh
ஜூன் 09, 2024 23:17

அனுராக்குவுக்கு ஏதாவது ஒரு பதவி அடுத்த ரௌண்டில் கொடுப்பார்கள். தற்போதய நிதி அமைச்சரின் துறையை மாத்துவது பாஜகவிற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது. ஒரு கட்சியின் செய்தி தெடர்பாளருக்கு ஒரு பெரிய பொருளாதாரம் குறித்து தெரிவதற்கு வாய்ப்பில்லை...பாஜகவில் பொருளாதாரம் தெரிந்தவர் ஒருவர் இல்லாதது அவர்கள் கட்சிக்கு பின்னடைவே. அனஸ்தீஸிய மருத்துவரை வைத்து அறுவை சிகிச்சை செய்வதைப்போல் செய்கிறது மோடி அரசு...


ES
ஜூன் 09, 2024 22:55

So what were they doing last ten years??


Sakthi Sakthiscoops
ஜூன் 09, 2024 21:48

பெட்ரோல். டீசல் விலையை குறையுங்கள்..தேர்தல் வந்த போது குறைக்கும் அதிகாரம் உங்களுக்கு இருந்தது


ulaganathan murugesan
ஜூன் 09, 2024 20:44

அப்போ பத்து வருசமா எதுவும் நடக்கலே?? நாடு முன்னேறலே?


பிரேம்ஜி
ஜூன் 09, 2024 20:24

கடந்த பத்து வருடங்களில் நாட்டை 100% முன்னேறி விட்டார்கள். இனி மக்களே தங்களை முன்னேற்றிக் கொள்வார்கள். ஜெய் பாரத்.


abdulrahim
ஜூன் 09, 2024 19:06

சரி சரி அழுவாத


vijay
ஜூன் 09, 2024 20:08

நீ அழுவாத தொடைச்சிக்கோ.


P. VENKATESH RAJA
ஜூன் 09, 2024 18:44

நாட்டை முன்னிலைக்கு கொண்டு வந்தால் நல்லது தான்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை