உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூன்று மாடி கட்டடத்தில் தீ காயமின்றி பெண் மீட்பு

மூன்று மாடி கட்டடத்தில் தீ காயமின்றி பெண் மீட்பு

கைலாஷ்: தென்கிழக்கு டில்லியில் மூன்று மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.கிழக்கு கைலாஷ் பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடியில் அதிகாலை 5:50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.எட்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து, தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தின்போது, மூன்றாவது மாடியில் சிக்கியிருந்த ஒரு பெண்ணை தீயணைப்புப் படையினர் மீட்டனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் மற்ற தளங்களில் இருந்தவர்கள், தாங்களாகவே வெளியேறிவிட்டனர்.இரண்டு மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மூன்று மாடி கட்டடத்தில் மூன்று சகோதரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இரண்டாவது மாடியில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின் கசிவே விபத்துக்கு காரணமாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ