உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீங்கள் ஒரு பெண்; உங்களுக்கு எதுவும் தெரியாது: நிதீஷ்

நீங்கள் ஒரு பெண்; உங்களுக்கு எதுவும் தெரியாது: நிதீஷ்

பாட்னா :பீஹார் சட்டசபையில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால் கடும் கோபமடைந்த முதல்வர் நிதீஷ் குமார், “நீங்கள் ஒரு பெண். உங்களுக்கு எதுவும் தெரியாது,” என, ராஷ்ட்ரீய ஜனதா தள பெண் எம்.எல்.ஏ., ரேகா பஸ்வானை நோக்கி ஆவேசமாகப் பேசியது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று சபை கூடியதும், முதல்வர் நிதீஷ் குமார் பேச எழுந்தார். அப்போது, இட ஒதுக்கீடு, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் முழக்கங்கள் எழுப்பினர். தன்னை பேச விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், முதல்வர் நிதீஷ் குமார் கடும் கோபமடைந்தார். அப்போது, ராஷ்ட்ரீய ஜனதா தள பெண் எம்.எல்.ஏ., ரேகா பஸ்வான் கேள்வி கேட்க எழுந்ததாகக் கூறப்படுகிறது.இதற்கு பதிலளித்து முதல்வர் நிதீஷ் குமார் பேசியதாவது:என் அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காக நிறைய செய்துள்ளது. அதனால் தான், இன்று உங்களால் இவ்வளவு பேச முடிகிறது. நீங்கள் ஒரு பெண். உங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்களோ அல்லது உங்கள் தரப்போ பெண்களுக்கு எதுவுமே செய்யவில்லை. பாட்னா உயர் நீதிமன்றம் ஜாதிவாரி இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளோம். இதில் நல்ல முடிவு வரும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், சபையில் கூச்சல், குழப்பம் அதிகரித்தது.இது குறித்து, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ''பெண்களுக்கு எதிராக மலிவான, நாகரீகமற்ற மற்றும் கீழ்த்தரமான கருத்துக்களை வெளியிடுவது, முதல்வர் நிதீஷ் குமாருக்கு வழக்கமாகி விட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Peterraj Jayakumar
ஜூலை 30, 2024 22:12

பச்சோந்தி முதல்வர்பதவியில் என்ன பண்ணினார் ஏழ்மையை நீக்கினாரா தமிழ் நாட்டில் பிச்சைக்கரண் போல் அனுப்பி வைத்ததுதான் மிச்சம் முட்டாளே தமிழ்நாட்டின் பெண்கள் முன்னேட்டதை பர


Sundar Sa
ஜூலை 26, 2024 09:39

நிதிஷ் குமாரின் தாய் மனைவி சகோதரி மகள் மற்றும் பேத்திக்கு ஆகியவர்களுக்கு பாவம் ..எதுவுமே தெரியாது போலும்.


Shanmug anandam
ஜூலை 26, 2024 07:44

ராஷ்ட்ரிய ஜனதாதள பெண் எம்.எல் ஏ விற்கு ஒன்றும் தெரியாது என்று தான் நிதிஷ் சொன்னார். அதை திருட்டு பசங்க திரித்து பெண்களுக்கு எதுவும் தெரியாது என்று சொன்னதாக பொய் சொல்லுகிறானுங்க. திருட்டுபசங்க பொய்யை வச்சி அரசியல் நடத்தி ஆட்சிக்கு வர துடிக்கிறானுங்க.


ramaswamy iyer sastrigal. ramaswamyiyer.
ஜூலை 25, 2024 12:55

Good


Anand
ஜூலை 25, 2024 12:32

அன்று தமிழக சட்டசபையில் ஒரு பெண் உறுப்பினரை பார்த்து ... அதுபோல இவரும்.


Sck
ஜூலை 25, 2024 11:36

ஒரு லேடிக்கு ஒன்னும் தெரியாதா? அட வீட்ல யாரும் லேடிஸ் இல்லையா? இல்ல உலக செய்திகள் பார்க்கிற பழக்கம் இல்லையா? அதுசரி பாத்தா மட்டும் உனக்கு புரியவா போவுது. கமலா ஹாரிஸ், லேடி, அமெரிக்க 250 வருட வரலாற்றில், தேர்தலில் ஜெயித்தால், முதல் ஜனாதிபதி ஆவார். பிக்காளி பிஹார் மாநிலத்தை விட 1000 மடங்கு பெரியது அமெரிக்கா.


skv srinivasankrishnaveni
ஜூலை 25, 2024 11:14

லேடி என்று குதர்க்கமா பேசும் இவாள்ளாம் ஒரு சி எம் 1மபி / யுபி / பிஹார் போல எந்த மாநிலத்திலேயும் பெண்களுக்கு பேசவே உரிமை கிடையாதுன்னு சொல்லுவாங்க இன்னொன்னும் சொல்லுவாங்க பொறுமை எல்லை மீறினால் அந்த பொண்ணுகள் எந்த எல்லைக்கும் போவாங்க என்று


kantharvan
ஜூலை 25, 2024 10:57

ஹிந்தி வெறியன் தானே வெளியே போயி இப்போ அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன் ஆயிட்டான்.


Haridev Prasath
ஜூலை 25, 2024 10:25

பிரிச்சனைகளை திசை திருப்புவது நம்மவர்களின் வழக்கம். முதலில் இந்த பட்ஜெட் எப்படி இருக்கிறது என்று குரல் எழுப்ப வேண்டும் சகோதரர்களே...இனி வாழ்வது ரொம்ப கடினமாக இருக்கும் ..


Sck
ஜூலை 25, 2024 11:39

எதவச்சு சொல்றீங்க. இல்ல அரசியல்வியாதிகள் சொல்றத கேட்டுட்டு இங்க வந்து பிட்ட போடுறீங்களா


Raa
ஜூலை 25, 2024 12:32

பாகிஸ்தான்ல இலவசமா விசா / குடியுரிமை கொடுக்கறாங்களாம்.


VT Tech Tamil
ஜூலை 25, 2024 09:52

சேர்ந்திருக்கற இடம் அப்படி. பிறகு பெண்கள் மேல் எப்படி மரியாதை வரும்?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை