உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., பிரமுகரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது

பா.ஜ., பிரமுகரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது

துமகூரு: பா.ஜ., பிரமுகரை 'ஹனிடிராப்' செய்து 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய, இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.துமகூரு குப்பியை சேர்ந்தவர் அன்னப்பா, 38. பா.ஜ., பிரமுகர். இவருக்கு, நான்கு மாதங்களுக்கு முன்பு, துமகூரின் கியாதசந்திராவை சேர்ந்த நிஷா, 27, என்ற இளம்பெண் அறிமுகம் முகநுால் மூலம் கிடைத்தது.முதலில் மெசேஜில் தகவல் பரிமாறிக் கொண்டனர். பின், மொபைல் போனில் பேசி வந்தனர். நேரிலும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.கடந்த மாதம் 15ம் தேதி பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூரில் உள்ள லாட்ஜிற்கு அன்னப்பாவும், நிஷாவும் சென்றனர்.இருவரும் நெருக்கமாக இருந்தனர். இதை ஜன்னல் வழியாக இருவர், மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர்.இந்த வீடியோவை அன்னப்பாவிடம் காட்டிய நிஷா, ''எனக்கு 20 லட்சம் ரூபாய் தர வேண்டும். ''இல்லாவிட்டால் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவேன்; போலீசில் பலாத்கார புகார் அளிப்பேன்,'' என, மிரட்ட ஆரம்பித்துள்ளார்.இதுகுறித்து கடந்த 8ம் தேதி, குப்பி போலீசில் அன்னப்பா புகார் செய்தார். தலைமறைவாக இருந்த நிஷாவை நேற்று முன்தினம் இரவு, கியாதசந்திராவில் போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகளான பரத், பசவராஜ் ஆகியோரை போலீஸ் தேடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி